Kathir News
Begin typing your search above and press return to search.

"இது ஒரு தவம், என்னை மீம்ஸ் போட்டு கோபாலபுரத்து கொத்தடிமைகள் அசிங்கப்படுத்த முடியாது" - கர்ஜித்த அண்ணாமலை

இது ஒரு தவம், என்னை மீம்ஸ் போட்டு கோபாலபுரத்து கொத்தடிமைகள் அசிங்கப்படுத்த முடியாது - கர்ஜித்த அண்ணாமலை

Mohan RajBy : Mohan Raj

  |  6 Jan 2022 12:00 PM GMT

"பா.ஜ.க'வுக்காக அரசு வேலையை விட்டு வந்தவன் நான், எல்லா துன்ப, துயரங்களையும் சந்தித்துவிட்டுதான் வந்திருக்கிறேன் ஒரு ட்விட் மூலமாகவோ, ஒரு மீம்ஸ் மூலமாகவோ என்னை அசிங்கப்படுத்திவிட முடியாது" என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூலாக கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பதவி ஏற்ற உடன் பல விமர்சனங்கள் எழுந்தன, பல எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆட்களை இணையத்தில் நியமித்து அண்ணாமலையை கேலி பேசினர். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் அண்ணாமலையின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தவறாக சித்தரித்து இணையத்தின் நகைச்சுவையாக வெளியிட்டனர். ஆனால் களமோ இதற்கு நேர் மாறாக அமைந்தது. இளைஞர்கள் பெருமளவில் பா.ஜ.க'வில் சேர்ந்து வருகின்றனர், பல கிராமங்களில் தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளுக்கு இணையாக பா.ஜ.க கொடிகள் பறக்க துவங்கியுள்ளது, பல பெண்கள் பா.ஜ.க பக்கம் வருகின்றனர், குடும்ப அரசியல், ஊழல் அரசியல் பிடிக்காதவர்கள் தங்கள் பார்வையை பா.ஜ.க பக்கம் திருப்புகின்றனர், தேசிய சிந்தனை உடையவர்கள் பா.ஜ.க பக்கம் தைரியமாக நிற்கின்றனர்.

இந்தளவிற்கு பா.ஜ.க வளர்ந்து வருவது பலருக்கு பிடிக்கவில்லை குறிப்பாக நடுநிலை என இதுவரை காட்டிக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனை குறிப்பிடும் விதமாக நேற்று பா.ஜ.க சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 97'வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் பேசிய அண்ணாமலை கூறியதாவது, "இன்னும் விவசாய சட்டம், விவசாய சட்டம் எனக்கூறி பா.ஜ.க'வை தாக்கி வருகின்றனர் சிலர், நாங்களே விவசாயம் செய்பவர்கள்தான் இன்று மாலை கூட விவசாய தோட்டத்தில் இருந்துதான் வந்தேன். விவசாயத்தில் லாப நஷ்டம் என்பது எனக்கு தெரியும். ஒரு நேரத்தில் தக்காளி 140 ரூபாய்க்கு விற்கிறது, பல நேரம் 12 ரூபாய்க்கு விற்கிறது. இதில் லாபம் அடைபவர்கள் விவசாயிகள் அல்ல இடைத்தரகர்கள்.

அண்ணாமலை தமிழகம் முழுக்க விவசாய சட்டத்தை ஆதரித்து பேசினார் ஆனால் மோடி அதை நீக்கிவிட்டார் அண்ணாமலைக்கு அசிங்கம் ஆகிவிட்டது பார் என என்னை பேசினார்கள். அரசு வேலையை விட்டு வந்தவன் நான் இனி எதுவுமே இல்லை நீங்கள் ஒரு ட்விட் போட்டு என்னை அசிங்கப்படுத்திவிட முடியாது. நான் யார் என தெரியாமல் நீங்கள் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள், இது ஒரு தவம். தவம் எடுத்து பா.ஜ.க'விற்கு வந்திருக்கிறேன். என்னை ட்விட் போட்டு, மீம்ஸ் போட்டு கோபாலபுரத்து கொத்தடிமைகள் அசிங்கப்படுத்தவே முடியாது" என பேசினார்.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News