Kathir News
Begin typing your search above and press return to search.

இது இந்திய தேசத்திற்கு ஏற்பட்ட பெரிய தலைகுனிவு - பிரதமர் பஞ்சாப் விவகாரத்தில் சரத்குமார் ஆவேசம்

இது இந்திய தேசத்திற்கு ஏற்பட்ட பெரிய தலைகுனிவு - பிரதமர் பஞ்சாப் விவகாரத்தில் சரத்குமார் ஆவேசம்

Mohan RajBy : Mohan Raj

  |  6 Jan 2022 12:00 PM GMT

"நாட்டின் பிரதமர் செல்லும் பாதையில் இது போன்ற பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருப்பது இந்திய தேசத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரும் தலைகுனிவு" என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.



நேற்றைய பொழுதில் பஞ்சாப் மாநிலத்தில் கூட்டதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்ட பொழுது போராட்டக்காரர்கள் பிரதமர் செல்லும் பாதையில் போராட்டத்தில் ஈடுபட்டதால பிரதமர் மோடியின் பாதுகாப்பு படை மேலே செல்லாமல் பிரதமர் காண்வாயை தடுத்து நிறுத்தியது. சுமார் 20 நிமிடம் பிரதமர் மோடி காருக்குள் அமர்ந்திருந்தார். இந்த விவகாரம் இந்திய அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர் பலர் பஞ்சாப் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கண்டனங்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சமத்து மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது, "பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு செல்கையில் பதிண்டா என்ற இடத்தில் கலவரக்காரர்கள் போராட்டம் காரணாம பாதுகாப்பை கருதி 20 நிமிடம் பயணத்தை தொரட முடியாமல் பயணத்தை ரத்து செய்தது வருந்ததக்கது, கண்டிக்கத்தக்கது.


நாட்டின் பிரதம மந்திரி செல்லும் பாதையில் இத்தகைய பாதுகாப்மு குறைபாடு ஏற்பட்டிருப்பது இந்திய தேசத்திற்கு ஏற்பட்ட பெரும் தலைகுனிவு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு பிரதிநிதியின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமையாகும்" என தெரிவித்துள்ளார்.


Source - ASIANET NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News