Kathir News
Begin typing your search above and press return to search.

"நீட் தேர்வு விலக்கு ரகசியம் என்னான்னு சொல்லுங்க?" - சட்டசபையில் பதிலறியாது திகைத்த தி.மு.க உறுப்பினர்கள்

நீட் தேர்வு விலக்கு ரகசியம் என்னான்னு சொல்லுங்க? - சட்டசபையில் பதிலறியாது திகைத்த தி.மு.க உறுப்பினர்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  6 Jan 2022 12:00 PM GMT

"தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் சூட்சுமம் இருப்பதாக கூறினீர்களே, எந்த சூட்சுமம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய போகிறீர்கள்" என சட்டசபையில் தி.மு.க'வை நோக்கி அ.தி.மு.க'வின் உறுப்பினர் வைத்தியலிங்கம் கேள்வி எழுப்பினார்.

இந்த வருடத்தின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று முதல் துவங்கி நடந்து வருகிறது. இதில் பல காரசார அரசியல் விவாதங்கள் கண்டிப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படியே நடந்து வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்தின்போது தி.மு.க ஜம்பமான முறையில் "நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி என எங்களுக்கு தெரியும்" என பிரச்சாரம் செய்தனர். பின்னர் ஆட்சிக்கு வந்த பிறகு பிற வாக்குறுதிகளை போலவே முயற்சி செய்கிறோம் என சமாளித்து வருகின்றனர்.

இது மக்களிடத்தில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் இன்று சட்டசபையில் அ.தி.மு.க உறுப்பினர் தி.மு.க உறுப்பினர்களை பார்த்து முகத்துக்கு நேராகவே கேட்டுவிட்டார்.

இது தொடர்பாக அ.தி.மு.க எம்.எல்.ஏ வைத்தியலிங்கம் இன்று பேசியதாவது, "நீட் தேர்வு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளீர்கள், நீட் தேர்வு ரத்துக்கு அ.தி.மு.க என்றுமே துணை நிற்கும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "டெல்லி சென்று போராடினார் நாங்களும் துணை நிற்போம், ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியுமா என நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் சூட்சுமம் இருப்பதாக கூறினீர்களே எந்த சூட்சுமம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய போகிறீர்கள் என கூறுங்கள். ஏனென்றால் மாணவர்கள் நீட் தேர்வு குழப்பத்தால் மிகவும் பாதிப்படைந்துள்ளார்கள்" என்றார்.

தி.மு.க உறுப்பினர்கள் பதிலறியாது வாயடைத்து போயினர்.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News