Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் பாதுகாப்பில் அலட்சியம்: காங்கிரஸை கண்டித்து 'தீ பந்தம்' ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலம் சென்றிருந்த போது அம்மாநில போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி செய்திருந்தனர். இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக போராட்டக்காரர்கள் பிரதமரின் வாகனம் நோக்கி வந்துள்ளனர். இதனால் அவர் சென்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உடனடியாக டெல்லி திரும்பினார்.

பிரதமர் பாதுகாப்பில் அலட்சியம்: காங்கிரஸை கண்டித்து தீ பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  7 Jan 2022 7:50 AM IST

பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலம் சென்றிருந்த போது அம்மாநில போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி செய்திருந்தனர். இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக போராட்டக்காரர்கள் பிரதமரின் வாகனம் நோக்கி வந்துள்ளனர். இதனால் அவர் சென்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உடனடியாக டெல்லி திரும்பினார்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் அரசின் அலட்சியப்போக்கை கண்டிக்கின்ற விதமாக நாடு முழுவதும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன்படி தமிழக பாஜகவினரும் பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து தீ பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி சென்னையில் இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, மாநில இளைஞரணி தலைவர் வினோஜ், மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் கையில் தீப்பந்தம் ஏந்தி காங்கிரஸ் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அதே போன்று மதுரையிலும் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். மதுரை மாவட்ட பாஜகவினர் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News