Kathir News
Begin typing your search above and press return to search.

"பஞ்சாப் சம்பவத்திற்கு அமைதியாக ஏன் இருக்கிறீர்கள்? நீங்கள் அதற்கு ஆதரவா?" - ஸ்டாலினை கேள்வி கேட்கும் தேஜஸ்வி சூர்யா

பஞ்சாப் சம்பவத்திற்கு அமைதியாக ஏன் இருக்கிறீர்கள்? நீங்கள் அதற்கு ஆதரவா? - ஸ்டாலினை கேள்வி கேட்கும் தேஜஸ்வி சூர்யா

Mohan RajBy : Mohan Raj

  |  7 Jan 2022 10:45 AM GMT

"பிரதமரின் பஞ்சாப் விவகாரம் நடந்து 24 மணி நேரத்திற்கு மேலாகியும் அமைதியா இருப்பதன் காரணம் என்ன பஞ்சாப்பில் நடந்தததை ஆதரிக்கிறீர்களா" என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எம்.பி.தேஜஸ்வி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.


கடந்த இரு தினங்கள் முன் சரியாக ஜனவரி 5'ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு பதிண்டா விமான நிலையத்தில் இருந்து செல்லும் வழியில் கலவரக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் பிரதமர் செல்லும் காண்வாய் வாகனங்கள் மேம்பாலத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடம் போராட்டகாரர்கள் கலவரத்தால் பிரதமர் செல்லும் திட்டம் கைவிடப்பட்டு பிரதமர் மீண்டும் திரும்பினார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்ந சம்பவம் பல விமர்சனங்களை எதிர்கொண்டது.


இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ.க சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எம்.பி.தேஜஸ்வி சூர்யா கூறியதாவது, "பிரதமர் பதவி என்பது கட்சிக்கு அப்பாற்பட்டது, பிரதமர் மோடியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதற்கு மாநில காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்நி, ராகுல் காந்தி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

பஞ்சாப் சம்பவத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் சம்பவம் நடந்து 24 மணி நேரம் மேல் ஆகியும் இதுவரை இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏதும் கூறாமல் மௌனம் காக்கிறார். பஞ்சாப்பில் நடந்த சம்பவத்தை ஆதரிக்கிறீர்களா என ஸ்டாலினிடம் கேட்க விரும்புகிறேன்" என்றார் தேஜஸ்வி சூர்யா.

Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News