Kathir News
Begin typing your search above and press return to search.

"என் மகள் நாட்டிற்கு பெருமை சேர்த்தார், சினிமாவில் நடிப்பதை தவிர நீங்கள் என்ன செய்தீர்கள்" - சித்தார்த்திடம் பாயும் சாய்னா தந்தை

என் மகள் நாட்டிற்கு பெருமை சேர்த்தார், சினிமாவில் நடிப்பதை தவிர நீங்கள் என்ன செய்தீர்கள் - சித்தார்த்திடம் பாயும் சாய்னா தந்தை

Mohan RajBy : Mohan Raj

  |  11 Jan 2022 11:15 AM GMT

"என் மகள் நாட்டுக்காக பாட்மிட்டன் விளையாடி பதக்கங்களையும், பெருமையும் சேர்ந்துள்ளார், நீங்கள் சினிமாவில் நடிப்பதை தவிர என்ன செய்தீர்கள் சித்தார்த்?" என விளையாட்டு வீராங்கணை சாய்னா'வின் தந்தை நடிகர் சித்தார்த்'திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.


பஞ்சாப் விவகாரம் குறித்து ட்விட்டரில் பாட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் கண்டனம் தெரிவித்ததுடன் இதை செய்தவர்கள் கோழை என ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சித்தார்த் சாய்னா'வின் ட்விட்'க்கு ஆபாச பதில் ட்விட் செய்தார். சாய்னா ஒரு பெண் எனவும் பாராமல் நாட்டிற்காக விளையாடிய விளையாட்டு வீராங்கனை என்றும் பாராமல் அரசியல் ஆர்வக்கோளாறு சித்தார்த் ட்விட் செய்தது தேசிய அளவில் அனைவரையும் கொந்தளிக்க வைத்தது. இதனை தேசிய மகளிர் ஆணையம் கையில் எடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள சாய்னா'வின் தந்தை ஹர்வீர் சிங் கூறியதாவது, "என் மகள் சாய்னா பாட்மிட்டன் விளையாடி நாட்டிற்கு பதக்கங்களையும், பெருமையையும் தேடி தந்துள்ளார். இந்த நாட்டிற்கு நடிகர் சித்தார்த் செய்த பங்களிப்பு என்ன? சினிமா'வில் நடிப்பது மட்டும்தான் செய்தார் வேறு என்ன செய்தார்" என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "என மகள் மீது சித்தார்த் பயன்படுத்திய வார்த்தைகள் மோசமானவை, இந்தியா ஒரு சிறந்த சமூகம் சாய்னாவிற்கு அனைவரின் ஆதரவு உள்ளது என நான் நம்புகிறேன்" என அவர் கூறியுள்ளார்.


Source - One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News