Kathir News
Begin typing your search above and press return to search.

அழியும் நிலையில் தாய்மார்கள் பாலூட்டும் அறை - தி.மு.க'வின் அடுத்த மூடுவிழா பாலூட்டும் அறையா?

அழியும் நிலையில் தாய்மார்கள் பாலூட்டும் அறை - தி.மு.கவின் அடுத்த மூடுவிழா பாலூட்டும் அறையா?

Mohan RajBy : Mohan Raj

  |  14 Jan 2022 8:15 AM GMT

அ.தி.மு.க ஆட்சியின் திட்டங்களை அழித்தெடுக்கும் நோக்கில் இருக்கும் தி.மு.க அரசு அடுத்தபடியாக பேருந்து நிலையங்களில் இருக்கும் தாய்மார்கள் பாலூட்டும் நிலையத்தை அழிக்க நினைக்கிறது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2015'ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டம் பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை, இதனால் பொது இடங்களில் குறிப்பாக பயணங்களில் கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள் அழும் குழந்தைக்கு பால் புகட்ட மறைவிடம் தேடி அலையாமல் இருக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் தனியாக ஒர் அறையை ஏற்படுத்தி ஒதுக்கி ஆணையிட்டார் ஜெயலலிதா. இதனால் எந்த நேரமாயினும் அழும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் உடனே பால் புகட்ட இயலும். அனைத்து மகளிர் மத்தியிலும் சிறப்பான வரவேற்பை பெற்ற இந்த திட்டமும் இரண்டாவது முறையாக ஜெயலலிதா அவர்கள் முதல்வராக ஓட்டுக்களை பெற உதவியது. ஓட்டு மட்டுமின்றி மகளிர் பக்கமிருந்து யோசித்த காரணத்தினால் இந்த அருமையான திட்டத்தை செயல்படுத்தினார் ஜெயலலிதா.

ஆனால் தற்பொழுது தி.மு.க ஆட்சிக்கு வந்து காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்த மனமின்றி பராமரிக்காமல் அழிக்க நினைக்கிறது. கடந்த ஆட்சியில் நகராட்சி, மாநகராட்சி என 351 தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் திறக்கப்பட்டன. நாற்காலி, மேசை மின்விசிறி, ஒரு பராமரிப்பு ஊழியர் என அனைத்தும் கொண்ட இந்த திட்டத்தை தற்பொழுதைய தி.மு.க அரசு பராமரிக்காமல் அழிக்க நினைக்கிறது.

அந்த வகையில் உதாரணமாக தென்காசி பேருந்து நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் பத்தாயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர், இங்கு செயல்பட வேண்டிய தாய்மார்கள் பாலூட்டும் அறையோ பராமரிப்பின்றி குப்பையாகவும், கதவுகள் இன்றியும் இருக்கிறது. இதனால் இங்கு அழும் குழந்தைக்கு அவசரத்திற்கு பால் புகட்ட முடியாமல் தாய்மார்கள் அவதிப்படுகின்றனர். அரசியல் தாண்டி மக்களின் தேவை உணர வேண்டிய ஆட்சியாளர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியை மனதில் கொண்டு மக்களை வாட்டி வதைக்கின்றனர்.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News