பிரதமரின் மாண்பை கெடுக்கும் வகையில் நிகழ்ச்சி: தொலைக்காட்சி மீது நடவடிக்கை பாயும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!
By : Thangavelu
தனியார் தொலைக்காட்சியான ஜி தமிழில் பிரதமர் மோடியின் மாண்பை சீர்குலைக்கின்ற வகையில் சிறுவர்களை வைத்துக்கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். தற்போது அந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் இணையதளங்களில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நாட்டின் பிரதமர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துவதற்கு யார் அனுமதி கொடுக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார்
— K.Annamalai (@annamalai_k) January 16, 2022
நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்!அவருக்கு என் நன்றிகள்
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு முருகன் அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார்.
நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்! அவருக்கு என் நன்றிகள். இவ்வாறு அண்ணாமலையின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது ட்விட் அதிகளவில் ரீ ட்விட் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Twiter