Kathir News
Begin typing your search above and press return to search.

கிருஸ்துவ மக்கள் தடுப்பூசி போடக்கூடாது என கூறும் மோகன்.சி.லாசரஸ் மீது நடவடிக்கை வேண்டும் - நாராயணன் திருப்பதி

கிருஸ்துவ மக்கள் தடுப்பூசி போடக்கூடாது என கூறும்  மோகன்.சி.லாசரஸ் மீது நடவடிக்கை வேண்டும் - நாராயணன் திருப்பதி

Mohan RajBy : Mohan Raj

  |  18 Jan 2022 11:15 AM GMT

கிருஸ்துவ மத போதகர் மோகன்.சி.லாசரஸ் கொரோனோ தடுப்பூசி செலுத்தக்கூடாது என அவதூறு பிரச்சாரம் செய்து வருவதை கண்டித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க'வின் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, "நாட்டில் ஒரே ஆண்டில் 157 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்தி இருக்கிறோம். கொரோனா தடுப்பு நடவடிக்கையில், இந்தியா உலகிற்கே வழிகாட்டியாய் திகழ்கிறது. இதற்கு, பிரதமர் மோடியே காரணம்.

தடுப்பூசி செலுத்தியதால் தான், தொற்றுகள் அதிகரித்திருந்தாலும் கூட உயிரிழப்புகள் ஏற்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், தடுப்பூசி கிடைக்கவில்லை என்பது போல் பிரசாரம் செய்தது. இதுவரை தமிழகத்தில் 8.98 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கு தி.மு.க வினர் என்ன பதில் சொல்ல போகின்றனர்?

துாத்துக்குடியைச் சேர்ந்த மோகன்.சி.லாசரஸ் என்பவர், கிறிஸ்துவ மக்களிடம் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்றும், செலுத்தினால் பல பிரச்னைகள் உருவாகும் என்றும் தவறாக வதந்தி பரப்புகிறார். தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் எடுக்கும் முயற்சிக்கு மூட்டுக்கட்டையாக, மக்களை துாண்டி விடும் வகையில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.

மதத்தின் பெயரால் வதந்தி பரப்புவது உயிரை பலி கொடுப்பதற்கு சமம். எனவே, வதந்தி பரப்புவோர் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.


இதற்கு முன் இதை மத போதகர் மோகன்.சி.லாசரஸ் இந்துக்கள் ஆலயங்கள் சாத்தான் வழும் இடம் என பேசி சர்ச்சையை தூண்டியது குறிப்பிடதக்கது.



Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News