மாணவி தற்கொலை: மதமாற்றம் எந்த அளவுக்கு வற்புறுத்தப்படுவது தெளிவாக தெரிகிறது: வானதி சீனிவாசன்!
By : Thangavelu
தமிழகத்தில் மதமாற்றம் எந்த அளவுக்கு வற்புறுத்தப்படுகிறது என்று மாணவி தற்கொலையை பர்த்தாலே தெரிகிறது என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம், வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் 47, இவருக்கு 17 வயது மதிக்கதக்க பெண் குழந்தை இருந்தார். அவர் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அவர் அங்கு உள்ள மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி வந்தார்.
அரியலூர் மாணவி லாவண்யா தெளிவாக வாக்குமூலம் கொடுத்துள்ளது , மதமாற்றம் எந்தளவு வற்புறுத்தப்பட்டு நடத்தப்படுகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.@CMOTamilnadu @mkstalin இம்மாணவி மரணத்திற்கு நீதி வழங்குவதோடு குடும்பத்திற்கு இழப்பீடும் வழங்கவேண்டும் .
— Vanathi Srinivasan (@VanathiBJP) January 20, 2022
இதனிடையே மாணவிக்கு திடிரென்று வயிற்று வலி ஏற்பட்டதால் முருகானந்தம் தனது மகளை வீட்டிற்கு அழைத்து சென்றார். இதன் பின்னர் உடல்நிலையில் மாற்றம் ஏற்படவே உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரியில் அனுமதித்துள்ளார். அப்போது தன்னை பள்ளி விடுதியில் மிகவும் கொடுமைப்படுத்தினர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி நான் பூச்சி மருத்து குடித்தேன் என மருத்துவர்களிடம் மாணவி கூறியுள்ளார். இதன் பின்னர் மாணவி கடந்த 19ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் மரணத்திற்கு மதமாற்றமே காரணம் என்று அவரது தந்தை முருகானந்தம் மற்றும் பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவியின் தற்கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவி தற்கொலை குறித்து கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாணவி லாவண்யா தெளிவாக வாக்குமூலம் கொடுத்துள்ளது, மதமாற்றம் எந்தளவு வற்புறுத்தப்பட்டு நடத்தப்படுகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மாணவி மரணத்திற்கு நீதி வழங்குவதோடு குடும்பத்திற்கு இழப்பீடும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter