Kathir News
Begin typing your search above and press return to search.

கிளைத் தலைவர் நடத்திவரும் சிறிய கடையில் 'டீ' குடித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!

கிளைத் தலைவர் நடத்திவரும் சிறிய கடையில் டீ குடித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!

ThangaveluBy : Thangavelu

  |  21 Jan 2022 6:33 AM GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிகவும் எளிதாக பார்க்கக்கூடியவரும், நல்ல பண்பாக பழகக்கூடியவரும் ஆவார். அவர் தமிழகத்தின் பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு சென்று கட்சிப்பணிகளை பார்வையிட்டு அங்கு சிறப்பாக செயல்படும் கிளைத்தலைவர்களை கவுரவித்தும் வருகிறார்.

அதே போன்று தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது ஈரோடு மாவட்டத்துக்கு செல்லும் வழியில் மொடக்குறிச்சி தொகுதிகுட்பட்ட காகம் கிராமத்தில் பாஜக கிளைத்தலைவர் சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். அந்த கடையில் திடீரென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். அது மட்டுமின்றி அவருக்கு துண்டு அணிவித்து கவுரவித்துள்ளார்.


இதன் பின்னர் கிளைத்தலைவர் போட்டுக்கொடுத்த டீயை அண்ணாமலை குடித்துள்ளார். இந்த புகைப்படங்களை பாஜக நிர்வாகி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிகவும் எளிமையாக இருப்பதற்கு இந்த புகைப்படங்களே சாட்சி என பலர் கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News