அமைச்சர் காந்தியை விமர்சித்ததாக தி.மு.க கட்சிக்காரரின் உணவகத்தை தீ வைத்து எரித்த உடன்பிறப்புக்கள்

By : Mohan Raj
அமைச்சர் காந்தியை தவறாக பேசியவர் உணவகத்திற்கு தி.மு.க'வினர் தீ வைத்த சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உட்கட்சி சண்டை, கட்சிக்குள் அடிதடி எனில் அலுவலகத்தை தீ வைப்பது என பெயர் பெற்ற தி.மு.க பத்து வருடம் கழித்து ஆட்சிக்கு வந்தாலும் திருந்தாமல் மீண்டும் அப்படியே உள்ளது. அந்த வகையில் அமைச்சர் எம்.எல்.ஏ காந்தியை பற்றி அவதூறாக பேசியவரின் உணவகத்தை தீ வைத்து தி.மு.க'வினர் எரித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் கைலாசகிரி ஒன்பதாவது வார்டு தி.மு.க மாவட்ட கவுன்சிலர் சரிதாவின் கணவர் முத்துக்குமார் வழக்கறிஞராக உள்ளார். அரசு விழாவில் தன் மனைவி சரிதாவை பேசவிடாமல் செய்ததற்கு நியாயம் கேட்டு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, ஆம்பூர் எம்.எல்.ஏ விஸ்வநாதன் ஆகியோர் பற்றி பேசி வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியுள்ளார் சக கட்சியினருக்கு.
இதனால் எப்படி அமைச்சரை பற்றி பேசலாம் என ஆத்திரமடைந்த தி.மு.க'வினர் முத்துக்குமாருக்கு சொந்தமான உணவகத்தை தீ வைத்து எரித்தனர். பின்னர் முத்துக்குமாரை கைது செய்யக்கோரி ஆம்பூர்-பேரணாம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனே தகவலறிந்து வந்த காவல்துறையினர் முத்துக்குமாரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
