மாணவிக்கு நீதிகேட்டு தஞ்சை ஆட்சியர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்!
By : Thangavelu
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு கட்டாயப்படுத்தி மாற்ற வற்புறுத்திய காரணத்தினால் அந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், மாணவி உயிரிழக்கும் முன்னர் அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. அந்த வீடியோவில் பேசிய மாணவி, பள்ளியில் தன்னை மதமாறுவதற்கு வற்புறுத்தினர். ஆனால் நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாற விருப்பம் இல்லை என்று கூறினேன். ஆனால் தன்னை பாத்ரூமை சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்தினர். இதனால் மனம் நொந்து தற்கொலைக்கு முயன்றேன் என்று பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த வீடியோவை பார்த்த மற்ற பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
As we voice for Lavanya. @arivalayam Govt needs to wake up n realise that their blind support for missionaries cannot be at the cost of hindu lives. #Justiceforlavanaya !We will not rest till justice is delivered. Today's @BJP4TamilNadu @BJYMinTN protest at Tanjore. @annamalai_k pic.twitter.com/FeTD63GjqN
— Vinoj P Selvam (@VinojBJP) January 22, 2022
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக இளைஞரணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த அமைப்பின் தலைவர் வினோஜ் பி செல்வம் மற்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் தொண்டர்கள், இந்து அமைப்பினர் ஏராளமானோர்கள் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை திமுக அரசுக்கு எதிராக எழுப்பினர். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தாருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் ஸ்தம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Twiter