"சினிமா வசனம் பேசாதீர்கள் முதல்வரே! முடியலைன்டா ராஜினாமா செஞ்சுட்டு போங்க" - ஸ்டாலினை எச்சரித்த வழக்கறிஞர்

By : Mohan Raj
"24 மணி நேரமும் உழைக்கிறேன் என சினிமா வசனம் பேசிக்கொண்டிருக்காதீர்கள், உங்களால் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை எனில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய்விடுங்கள்" என வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பேசும் வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று முன்தினம் சென்னை கொடுங்கையூர் போலீசார் எம்.ஆர் நகர் சந்திப்பில் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வியாசர்பாடி புது நகரை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் முக கவசம் அணியவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் வந்த வாக்குவாதத்தில் போலீசார் அப்துல் ரஹீமை தாக்கியுள்ளனர். இது தொடர்பான விவகாரம் இருதரப்பிலும் பெரிய சர்ச்சைகளை கிளம்பியுள்ளது.
போலீசார் தாக்கியவர் சட்டக்கல்லூரி மாணவர் என்பதால் வழக்கறிஞர்கள் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக இறங்கியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "ஒரு சட்டக்கல்லூரி மாணவர்களை அடிப்பது சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரையே அடிப்பதற்கு சமம். ஆனால் அந்த மாணவர் போலீசை அடித்ததாக கூறுகின்றனர். அது நம்பும்படியாக இல்லை. அந்த மாணவர் மீது சம்மந்தமில்லாத வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது ஸ்டாலின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தார் ஆனால் இந்த விவகாரத்தில் அவர் மௌனமாக இருந்து வருகிறார். முதல்வர் ஸ்டாலின் அவர்களே நீங்கள்தான் காவல்துறை மந்திரி மக்களை காப்பாற்றுகிறேன், மக்களுக்காக 24 மணி நேரம் உழைக்கிறேன் என சினிமா வசனம் பேசிக் கொண்டிருக்காதீர்கள். உண்மையில் போலீசை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்றால் நீங்கள் மந்திரியாக இருங்கள் இல்லையெனில் அந்த மந்திரி பதவியை ராஜினாமா செய்து விடுங்கள்" என வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
