"டாஸ்மாக் இல்லாத ஏரியாவிலும் கூட கடையை திறக்கிறது தி.மு.க அரசு" - ஆதாரத்துடன் உண்மையை உடைத்த தங்கமணி!

By : Mohan Raj
"படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என வாக்குறுதிகள் தந்து படிப்படியாக டாஸ்மாக் கடைகளை உயர்த்தி கொண்டிருக்கின்றனர் ஆளும்கட்சியான தி.மு.க'வினர்" என முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சுமத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க கட்சியின் விழாவில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவது, "தி.மு.க அரசு மக்களின் வெறுப்பை சம்பாதித்து விட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது 500 டாஸ்மாக் கடைகளை மூடினார், பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த பொழுது 500 கடைகளை மூடினார். ஆனால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை முடுவோம் என தேர்தலில் வாக்குறுதிகள் தந்த தி.மு.க படிப்படியாக டாஸ்மாக் கடைகளை திறந்துகொண்டு வருகிறது.
உதாரணமாக பள்ளிப்பாளையம் நகராட்சியில் கடந்த பத்து ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகள் இல்லாமல் இருந்தன ஆனால் தி.மு.க ஆட்சியமைத்த பிறகு 2 டாஸ்மாக் கடைகளை கொண்டு வந்துள்ளது. தி.மு.க'வை சேர்ந்தவர்களே இங்கு டாஸ்மாக் வரக்கூடாது என போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது, அதனால் மக்கள் தி.மு.க ஆட்சியை வெறுக்க துவங்கியிருக்கின்றனர்" என்றார் தங்கமணி.
