தஞ்சை மாணவியின் இறப்பிற்கு நீதி வேண்டும் - முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து குரல் எழுப்பிய சீனு ராமசாமி

By : Mohan Raj
"சாவின் நீதியை மக்கள் எப்போதும் கேட்பர், அது லாவண்யா வரை தொடர்கிறது" என மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு இறந்த சிறுமிக்கு நியாயம் கேட்டு இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தஞ்சை மைக்கேல்பட்டியில் கிருஸ்துவபள்ளியில் இறந்த மாணவி லாவண்யாவிற்கு நீதி கேட்கும் போராட்டம் நாளுக்குநாள் வலுத்து வருகிறது. பல பிரபலங்கள் நாடு முழுவதும் குரல் எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க'வினர் கடந்த ஒரு வாரமாக அநியாயமாக தற்கொலை செய்து கொண்டு இறந்த மாணவிக்கு நீதி கேட்டு வீதியில் இறங்கி போராடிவருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இதற்கு நீதி கேட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், "யாரும் வாழ்வதற்கான
காரணம்
கேட்பதில்லை.
ஆனால் சாவுக்கு உடனே கேட்பார்கள்.
இறப்பு தகவல் சொன்னால்
முதலில் கேட்பது
"எப்படிங்க"
என்பதுதான்
சாவில் நீதியை
மக்கள்
எப்போதும் கேட்பர்.
அது லாவண்யா வரை
தொடர்கிறது" என தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு செல்லும் படி பதிவிட்டுள்ளார்.
