மதமாற்றத்தால் உயிரிழந்த மாணவியின் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: வானதி சீனிவாசன் டெல்லியில் பேட்டி!
By : Thangavelu
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் பள்ளி மாணவி மதமாற்றத்தால் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தற்கொலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்னும் ஒரு வார்த்தைக்கூட சொல்லாமல் இருக்கிறார் ஏன் என்று தெரியவில்லை.
பள்ளியில் மாணவிக்கு மதமாற்றும் கும்பலால் மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் தற்கொலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். எனவே மாநில போலீசார் விசாரணை சரியாக செல்லாது என்பதால் உடனடியாக சிபிஐயிடம் வழக்கை மாற்ற வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Thanks Sh @JPNadda ji for constituting the team for #Justiceforlavanaya .
— Vanathi Srinivasan (@VanathiBJP) January 27, 2022
சிறுமி லாவண்யா மரணம் தொடர்பாக 4 பேர் கொண்ட குழுவினை @BJP4India தேசியத்தலைவர் அறிவித்துள்ளார். pic.twitter.com/WxcySDUSQz
மேலும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின்படி தற்போது 4 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை பாஜக நியமனம் செய்துள்ளது. அதன்படி திருமதி சந்தயா ராய் எம்.பி., மத்திய பிரதேசம், திருமதி விஜயசாந்தி தெலங்கானா, திருமதி சித்ரா தாய் வாங், மகாராஷ்டிரா, திருதி கீதா விவேகானந்தா கர்நாடக ஆகியோர்கள் இந்த குழுவில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் விரைவில் தமிழகம் சென்று விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Twiter