Kathir News
Begin typing your search above and press return to search.

கிருஸ்துவ மதத்திற்கு மாற கொடுமைபடுத்திய கணவரை போலீசிடம் பிடித்து கொடுத்த பெண்!

கிருஸ்துவ மதத்திற்கு மாற கொடுமைபடுத்திய கணவரை போலீசிடம் பிடித்து கொடுத்த பெண்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  27 Jan 2022 8:15 PM IST

கிறிஸ்தவ மதத்தைத் தழுவும்படி கணவர் வற்புறுத்துவதாக பெண் ஒருவர் ஷிகாரிபூர் கிராமப்புற காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதமாற்ற தடைச்சட்டம் அமலில் இருக்கும் கர்நாடகாவில் ஷிகரிப்பூர் தாலுகாவில் உள்ள மாத்ரல்லியில் வசிக்கும் நிர்மலாவை என்பவர் கடந்த பல மாதங்களாக தன் கணவர் சுரேஷ் நாயக் தன்னை கிறிஸ்தவ மதத்தை தழுவும் விதத்தில் கொடுமை படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார் இந்து மதத்தை கைவிட்டு விட்டு கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக தினமும் தன்னை தாக்கி வருகிறார் எனவும் கணவரின் தொல்லை காரணமாக இரவு நேரங்களில் கிறிஸ்தவ மதத்தை போதிப்பதும், குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.


அதற்கு அந்தப் பெண் என்றால் கிறிஸ்தவ மதத்துக்கு மாற முடியாது என மறுப்பு தெரிவித்த போது அதற்கு அந்த பெண்ணின் கணவர் தாக்கியதாகவும் சொந்த ஊருக்கு செல்லும் படியும் கூறியதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதுபோல் கடந்த ஒன்றரை மாதமாக தனது கணவர் கொடுமைப் படுத்துவதாக அந்த பெண் கூறியுள்ளார் மேலும் அந்தப் பெண் இந்து மதத்தை புறக்கணிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவர் சுரேஷ் நாயக் மற்றும் அவரது மாமா துர்கா நாயர் ஆகியோர் தன்னுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக அவர்களின் மேல் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Source - DH

Next Story
கதிர் தொகுப்பு
Trending News