நீட் தீர்மானம் வேஸ்ட்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிருஷ்ணசாமி கடிதம்!
நீட் தேர்வு பற்றி சட்டமன்றத்தில் மறுபடியும் ஒரு தீர்மானம் நிறைவேற்றுவது தேவையற்ற ஒன்று என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
By : Thangavelu
நீட் தேர்வு பற்றி சட்டமன்றத்தில் மறுபடியும் ஒரு தீர்மானம் நிறைவேற்றுவது தேவையற்ற ஒன்று என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கிருஷ்ணசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நீட் தேர்வு ரத்து செய்வதற்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சபாநாயகருக்கே மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், நாளை (ஜனவரி 8) சட்டசபை கூட்டத்தை கூட்டி மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளீர்கள். ஆனால் நீட் தேர்வுக்கு நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து ஒரு மாநிலம் மட்டும் விலக்கு பெறுவது என்பது இயலாத காரியம் ஆகும்.
எனவே உங்களுடைய அரசியல் ரீதியான அணுகுமுறைக்கு ஆளுநரை ஆயுதமாகவும், கேடயமாகவும் பயன்படுத்தவும் தமிழக மக்களை பலிகடா ஆக்கவும் நினைப்பதில் நியாயம் இல்லை. இவ்வாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar