நலன் கருதி கூடுதல் பாதுகாப்பை ஓவைசி ஏற்க வேண்டும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
முஸ்லிம் அமைப்பை சேர்ந்த எம்.பி.யான ஓவைசி மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
By : Thangavelu
முஸ்லிம் அமைப்பை சேர்ந்த எம்.பி.யான ஓவைசி மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இதனால் அவரது பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் அந்த பாதுகாப்பை ஓவைசி ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் விளக்கம் அளித்திருந்தார்.
அதன்படி அவர் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: எம்.பி. ஓவைசி நிகழ்ச்சிகளுக்கு செல்கின்ற போது பயண விவரத்தை அவர் தெரிவிக்காமல் விட்டுள்ளார். இதனால் உரிய முறையில் பாதுகாப்பு அளிக்க இயலாமல் போனது. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் 3 புல்லட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்துக்கு தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஓவைசியின் பாதுகாப்பை மத்திய அரசு அதிகரிக்க முடிவு செய்தது. ஆனால் அந்த பாதுகாப்பை அவர் ஏற்க மறுத்துவிட்டார். எனவே பாதுகாப்பை ஓவைசி ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார்.
Source, Image Courtesy: Dinamalar