Kathir News
Begin typing your search above and press return to search.

"திருந்துங்கள் அல்லது திருத்தப் படுவீர்கள்" தி.மு.க'வை எச்சரித்த அண்ணாமலை - பின்னணி என்ன?

திருந்துங்கள் அல்லது திருத்தப் படுவீர்கள் தி.மு.கவை எச்சரித்த அண்ணாமலை - பின்னணி என்ன?
X

Mohan RajBy : Mohan Raj

  |  9 Feb 2022 7:45 PM IST

'திருந்துங்கள் இல்லையேல் திருத்தப் படுவீர்கள்' என தி.மு.க'விற்கு அண்ணாமலை எச்சரிக்கை கொடுத்துள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது. அப்போது பேசிய அண்ணாமலை கூறும்பொழுது கன்னியாகுமரி மாவட்டத்தில் 100% நாம் வெற்றி பெற முடியும் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும், சென்னையில் 200 வார்டுகளிலும் போட்டியிடுகிறோம் என்றார்.


மேலும் பேசிய அவர் தி.மு.க ஆட்சிக்கு வந்து 8 மாதம் ஆகி விட்டன, ஆனால் 80 ஆண்டு கால ஆட்சியில் உள்ள கோபம் மக்களிடம் உள்ளது. ஸ்டாலின் பேசுவது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது, அமைச்சர்கள் ஊழல் வாதிகளாக மாறிவிட்டனர் 8 மாதங்களில் மக்கள் நலத் திட்டங்கள் எதையும் அவர்கள் செய்யவில்லை. 500'க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து 10 வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற முடியாத கையாலாகாத அரசாக தி.முக உள்ளது இதனை மறைக்க மத்திய அரசை வம்புக்கு இழுக்கின்றனர் தி.மு.க'வினர்.


அரியலூர் மாணவியின் இறப்பின் போது தி.மு.க பெயருக்கு கூட இரங்கல் செய்தி அனுப்பவில்லை, எனவே தி.மு.க'வின் ஆணவத்தை தடுத்து நிறுத்தும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். மக்களுக்கு எதிரான செயல்பாட்டை சுட்டிக்காட்டவும் திருந்துங்கள் அல்லது திருத்த படுவீர்கள் என தி.மு.க ஆட்சியாளர்களுக்கு இந்த தேர்தல் மூலம் நாம் சொல்ல வேண்டும், தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழகம் பின்னோக்கிச் சென்று இருக்கிறது" என்றார் அண்ணாமலை.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News