தான்தோன்றித்தனமான தி.மு.க ஐ.டி விங்க், கடுப்பான முதல்வர் - பின்னணி என்ன?

By : Mohan Raj
தி.மு.க ஐ.டி விங் நிர்வாகிகள் தான்தோன்றித்தனமான விவாதங்களை, பதில்களை பதிவிட்டு வருவதால் முதல்வர் கோபம் அடைந்துள்ளார் என தி.மு.க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5'ம் தேதி தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முதன்முறையாக காணொளி வாயிலாக ஐ.டி விங்க் மாநில நிர்வாகிகள் தொடங்கி பல்வேறு தரப்பினருடன் உரையாடினார், அப்போது பேசிய அவர் கூறியதாவது, "எதிரணியினர் நம்மை கோபப்படுவார்கள் ஆத்திரப்படுத்துவார்கள் அதற்கு எதிர்வினையாற்ற வேண்டும், அவர்களை எதிர்ப்பது அவர்களை போல நீங்களும் செய்யாதீர்கள் சாதியைச் சொல்லி திட்டுவார்கள், மதத்தை வைத்து திட்டுவார்கள், பெண்களாக இருந்தால் ஆபாசமாக திட்டுவார்கள், அதுதான் அவர்களின் பண்பாடு" என்றார்.
மேலும் பேசிய அவர், "பதில் சொல்கிறோம் என நினைத்துக்கொண்டு புது பிரச்சினையைத் உருவாக்கக் கூடாது சமீபகாலமாக தேவையற்ற சில விமர்சனங்களை நம்முடைய தி.மு.க'வின் இணையதள தோழர்கள் சிலர் செய்கிறார்கள் அதையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தலித் தலைவர்கள் குறித்தும் இலங்கை விவகாரங்கள் குறித்தும் அவசியமற்ற விவாதங்களை செய்வதன்மூலம் கழகத்துக்கு அவர்கள் நன்மையை செய்யவில்லை கெட்ட பெயர்தான் தேடித் தருகிறார்கள்" என்றார்.
முதல்வர் இப்படி எச்சரித்தது குறித்து தி.மு.க'வின் ஐ.டி விங் நிர்வாகிகள் கூறும்போது தி.மு.க'வின் நிர்வாகிகள் தான்தோன்றித்தனமான விவாதங்களை பதில்களை பதிவிட்டு வந்துள்ளனர் என்பதை மறுக்கமுடியாது தலித் தலைவர்கள் குறித்த விவாதத்தின் போது சிலர் தெரியாமலோ, தெரிந்தோ கூட்டணியில் இருக்கும் தலைவர் பற்றி அவதூராக பதிவிட்டனர், அதுபோல் தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருந்ததால் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பதிவிடுகின்றனர். மேலும் இலங்கை தமிழர் கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதற்கு தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என தொடர்ச்சியாக விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
சில நாட்கள் அமைதியாக இருந்த ஐ.டி விங் நிர்வாகிகள் சமாளிக்கிறேன் என்ற பெயரில் விடுதலைப்புலிகள் பற்றியும் 'கருணாநிதியை தொட்டால் நாங்கள் புலிகளை தொடுவோம்' என்பது போன்ற பதிவுகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்தது தி.மு.க மீது விமர்சனம் எழவே செய்தது.
மேலும் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நல்ல பின்தொடர்பாளர்கள் உள்ள பக்கங்களையும், சேனல்களையும் தி.மு.க'வுக்காக விலை கொடுத்து வாங்கினார் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அதெல்லாம் தி.மு.க சார்ந்த கருத்துக்கள் பரப்பப்பட்டன. அப்படி ஒரு சேனலில் தான் அப்பொழுது சர்ச்சை வெடித்தது அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர், அவர்களை பின்னின்று இயக்கியது தி.மு.க'தான் என அப்போது சில புகைப்படங்களும் வெளிவந்தன. இதுபன்ற இன்னும் ஏராளமான ட்விட்டர் பக்கங்கள் இருக்கின்றன நேரடியாக தி.மு.க'வின் நிர்வாகியாக பதில் போட முடியாதவர்கள் மறைமுகமாக அந்த பக்கம் வேறொரு கணக்கின் மூலம் பதில் போட்டு வருகிறார்கள் அப்படி செய்வதும் தி.மு.க'வுக்கு தான் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக அல்லாமல் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் இதுதான் இதற்குப் பின்னணி" என்று கூறினர்.
