சீருடையை அணிய விரும்பாதவர்கள் 'மதரசா'வில் சேரலாம்: ஹிஜாப் விவகாரத்தில் ஹெச்.ராஜா கருத்து!
கர்நாடகாவில் பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களும் சீருடை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது.
By : Thangavelu
கர்நாடகாவில் பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களும் சீருடை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இதனிடையே இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். இது மற்ற மாணவர்களிடையே இனப்பாகுபாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து மாணவர்களும் சீருடை அணிந்து வரவேண்டும் என அரசு கட்டாயமாக்கியது.
பள்ளி சீருடையை அணிய விரும்பாதவர்கள் பள்ளியை விட்டு வெளியேறி மதரசாவில் சேருவது நல்லது
— H Raja (@HRajaBJP) February 9, 2022
இதற்கு இஸ்லாமிய மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்தனர். இதனால் இந்து மாணவர்கள் அனைவரும் காவித்துண்டை அணிந்து வந்தனர். இந்த சம்பவம் கர்நாடகா முழுவதும் எதிரொலித்தது. இந்து மாணவர்கள் அனைவரும் காவித்துண்டை அணிய தொடங்கினர். சீருடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: பள்ளி சீருடையை அணிய விரும்பாதவர்கள் பள்ளியை விட்டு வெளியேறி மதரசாவில் சேருவது நல்லது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Source: Twiter
Image Courtesy: Asianet News