அத்தனை காவி துண்டு மாணவர்கள் மத்தியிலும் அந்த பெண் நிம்மதியாக நடந்து போனார், காவி தான் ஹிஜாபுக்கு பாதுகாப்பு - அர்ஜுன் சம்பத்!

By : Mohan Raj
"காவி துண்டு அணிந்த ஒரு மாணவர் கூட கோஷம் எழுப்பிய அந்த மாணவியை சீண்டவில்லை ஏனென்றால் காவி துண்டு ஹிஜாபுக்கு பாதுகாப்பு கொடுக்கும்" என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கும், கிறிஸ்தவர்கள் சிலுவை அணிவதற்கும் இந்து மக்கள் கட்சி ஆதரவு தெரிவிப்பதாகவும் காவிக்கொடி ஆளும் இடங்களில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இருக்கும் எனவும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, "இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தான் பள்ளிக்கு வருவேன் என கூறுகிறார்கள், இதனை நாங்கள் ஆதரிக்கிறோம் அவர்கள் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம் இந்தியாவில் புர்கா அணிய தடை இல்லை இந்துக்கள் யாரும் அதனை எதிர்க்கவில்லை, நாங்கள் காவி அணிவதை அவர்களின் மதிப்பைதை போல கிறிஸ்தவர்கள் சிலுவை அணிவதை நாங்கள் மதிக்கிறோம். அதே வேளையில் சீருடைக்கு தான் ஆதரவு தெரிவிக்கிறோம். படிக்கும் இடத்தில் அனைவரும் சமம், 'அல்லாஹு அக்பர்' என்ற மாணவி கோஷம் எழுப்பிய படங்களை பார்த்தேன் அந்த மாணவிக்கு பாராட்டு! காவி துண்டு அணிந்த ஒரு மாணவர் கூட அங்கு அவரை ஏதும் செய்யவில்லை, காவி துண்டு ஹிஜாபுக்கு பாதுகாப்பு கொடுக்கும்" என்றார்.
