"பிபின் ராவத்தை கிண்டல் செய்த காங்கிரஸ் தற்போது அவரை வைத்து ஓட்டு கேட்கிறது" - பிரச்சாரத்தில் விளாசிய பிரதமர் மோடி

By : Mohan Raj
பிபின் ராவத்தை 'குண்டர்' என விமர்சனம் செய்தவர்கள் தற்பொழுது அவரின் பெயரை வைத்து வாக்கு சேகரிக்கின்றனர் என பிரச்சாரத்தின்பது பிரதமர் மோடி பேசியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஸ்ரீ நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது, "எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுக்கவேண்டும் மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பெயரை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிக்கின்றனர், நாட்டின் முதல் சி.டி.எஸ் ஆக பிபின் ராவத் நியமிக்கப்பட்ட பொழுது அவரின் கட்சியை சேர்ந்தவர்கள் அவரை 'குண்டர்' என விமர்சனம் செய்தனர் ஆனால் இப்பொழுது பிபின் ராவத் வைத்து வாக்கு சேகரிக்கின்றனர்' என்றார்.
மேலும் பேசிய அவர், "உத்தரகாண்ட் மாநிலத்தில் மக்கள் அனைவரும் பா.ஜ.க'விற்கு வாக்களிக்க வேண்டும் பா.ஜ.க அடுத்த 5 ஆண்டுகளுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதில் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கங்கை அருகே இயற்கை விவசாயம் செய்ய பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன" என்றார்.
