உதயநிதி பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாத தி.மு.க.வினர்!
கடலூர் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாத திமுகவினரால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
By : Thangavelu
கடலூர் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாத திமுகவினரால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் எம்.எல்.ஏ.வும் மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பண்ருட்டியில் இரவு 8 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்வதாக கூறப்பட்டது. ஆனால் மாலை 5 மணி முதலே திமுகவினரை அழைத்து வந்து நிறுத்தியதால் கூட்டம் நிரம்பியது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நிற்க வேண்டிய நிலையை திமுகவினர் ஏற்படுத்தினர். அது மட்டுமின்றி அப்பகுதியில் அவசரமாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வந்துள்ளது. அதற்கு திமுகவினர் வழிவிடாமல் இருந்தனர். இதனால் ஆம்புலன்ஸ் நகர்ந்து செல்ல முடியாமல் திணறியது. இதன் பின்னர் கடைசியாக போலீசார் சிறிது நேரம் கழித்த பின்னர் இடைவெளி ஏற்படுத்தி கொடுத்த பின்னர் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்றது. நோயாளியை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் திமுகவினர் அஜாக்ரதையாக இருப்பதை பார்த்த பொதுமக்கள் என்வென்று சொல்வது என்று புலம்பி சென்றதை பார்க்க முடிந்தது.
Source: Amma Express
Image Courtesy: Deccan Herald