Kathir News
Begin typing your search above and press return to search.

முறிந்தது திரிணாமுல் காங்கிரஸ் - பிரசாந்த் கிஷோர் கூட்டணி

முறிந்தது திரிணாமுல் காங்கிரஸ் - பிரசாந்த் கிஷோர் கூட்டணி

Mohan RajBy : Mohan Raj

  |  12 Feb 2022 9:30 AM GMT

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அவர் தேர்தலில் வெற்றிபெற பக்கபலமாக இருந்த ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர்'க்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேற்குவங்கத்தில் கடந்த மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெற்றது, இதில் திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதனைதொடர்ந்து மம்தா பேனர்ஜி முதல்வரானார், இந்த தேர்தலில் மம்தாவின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். மேலும் தேர்தலுக்கு பிறகும் மம்தா பானர்ஜிக்கு பல்வேறு வகைகளில் பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசனை கூறிவந்தார். ஐபேக் நிறுவனமும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வந்தது.


இந்தச் சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிரசாந்த் கிஷோர் தரப்புக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கி உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதுதொடர்பாக மம்தா பானர்ஜி இன்று முக்கிய முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கிறது, இதில் என்ன நடந்தது என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சந்திர பட்டாச்சார்யா தெரிவிக்கும்பொழுது, 'பிரசாந்தின் ஐபேக் குழுவினர் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தியதாகவும் இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் விசாரணை நடத்த வேண்டும்' எனவும் தெரிவித்தார்.


மேலும் கோவா மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் பானர்ஜி தன் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். பிரசாந்த் நிறுவனம் அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்யவில்லை மோதல் அதிகரித்ததே இதற்கு காரணம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Source - One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News