Kathir News
Begin typing your search above and press return to search.

"பாவம் தமிழ்நாட்டு நிலைமை இப்படியா ஆகனும்?" மேற்கு வங்க ஆளுநர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை கிண்டலடித்த பி.எல்.சந்தோஷ்

பாவம் தமிழ்நாட்டு நிலைமை இப்படியா ஆகனும்? மேற்கு வங்க ஆளுநர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை கிண்டலடித்த பி.எல்.சந்தோஷ்
X

Mohan RajBy : Mohan Raj

  |  14 Feb 2022 6:00 PM IST

பாவம் தமிழ்நாட்டிற்கு முதல்வர் ஸ்டாலினை விட நல்ல ஆட்சி நிர்வாகம் தேவை' என பா.ஜ.க'வின் பி.எல்.சந்தோஷ் விமர்சித்துள்ளார்.


மேற்கு வங்க மாநில சட்டசபையை அம்மாநில ஆளுநர் ஒத்திவைத்தது தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது, மேற்கு வங்கத்தில் சட்டசபை கூட்டத் தொடரை நிறுத்துவதாக நேற்று அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் அறிவித்தார். மேலும் சட்டவிதி 174'ன் கீழ் தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டசபை கூட்டத்தொடரை ஒத்திவைப்பதாக ஆளுநர் குறிப்பிட்டு இருந்தார். இந்த விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் அனைத்திற்கும் முந்திக்கொண்டு கருத்து சொல்லும் ஸ்டாலின் இதற்கும் விமர்சனம் செய்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'நடந்து கொண்டிருக்கும் சட்டசபை கூட்டத்தொடரை ஆளுநர் பாதியில் நிறுத்துவது தவறானது இது நடத்தை விதிகள் மற்றும் நடைமுறைக்கு எதிரானது ஒரு மாநிலத்தின் உயர் பதவியில் இருக்கும் ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்தும் ரோல்மாடலாக இருக்க வேண்டும்' என்று கூறி கடுமையாக விமர்சனம் செய்தார்.


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆளுநர் ஜெக்தீப் ட்விட்டர் பதிவில், 'சட்டசபை ஒதுக்கி வைக்கப்பட்டது குறித்து என்னுடைய அறிவிப்பில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடுமையான விமர்சனம் செய்துள்ளார், அதில் உண்மை இல்லை மேற்குவங்க முதல்வரின் கோரிக்கையை ஏற்று தான் சட்டப்பரவை ஒத்திவைக்கப்பட்டது ஸ்டாலினின் குற்றச்சாட்டு உண்மையானது இல்லை அது தவறானது' என விளக்கம் அளித்தார்.


இந்நிலையில் இப்படி பொய்யான குற்றச்சாட்டை கூறி மாட்டிக்கொண்ட முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் விதமாக கர்நாடகாவை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் விமர்சனம் செய்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "வாரிசு அரசியலில் ஈடுபடும் நபர்கள் எதற்கும் தயாராக இல்லை எதுவும் தெரிந்து கொள்ளவில்லை என்பதை முதல்வர் ஸ்டாலினின் இந்த கருத்து காட்டுகிறது, கடந்த காலங்களில் இவர்கள் சொல்வதை மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர் ஆனால் இப்பொழுது நிலைமை அப்படியில்லை பாவம் தமிழ்நாட்டிற்கு இதைவிட நல்ல ஆட்சி நிர்வாகம் தேவை' என தமிழக முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு பி.எல்.சந்தோஷ் விமர்சனம் செய்துள்ளார்.



Source - One India tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News