Kathir News
Begin typing your search above and press return to search.

பஞ்சாபில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய சட்டங்களை கொண்டு வருவோம் - உளறி மாட்டிக்கொண்ட ராகுல்

பஞ்சாபில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய சட்டங்களை கொண்டு வருவோம் - உளறி மாட்டிக்கொண்ட ராகுல்

Mohan RajBy : Mohan Raj

  |  15 Feb 2022 10:30 AM GMT

மோடியின் விவசாய சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் செய்த காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல் காந்தி விவசாயிகளிடம் உங்கள் பண்ணைகளிலிருந்து உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் தக்காளி சாஸ் போன்றவற்றை வளர்க்கலாம் என வேடிக்கையாக கூறியது பரபரப்பாகியுள்ளது.

ஏற்கனவே மோடி அரசு வழங்கிய வாக்குறுதியின்படி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக உணவு பூங்காக்களுக்கு விற்கலாம் என்ற முறையை விவசாய சட்டங்களாக அமல்படுத்த முயற்சிக்கும் பொழுது அதனை விவசாயிகள் என்ற போர்வையில் ஊடுருவிய போராட்டக்காரர்களை வைத்து காங்கிரஸ் கட்சி டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக போராடி தடுத்து விவசாய சட்டங்களை வாபஸ் பெற வைத்தது, இந்நிலையில் மக்களின் பாதுகாப்பிற்காக பிரதமர் மோடியும் விவசாய சட்டங்களை வாபஸ் பெற்றார்.


ஆனால் தற்போது ராகுல் காந்தி மோடியின் விவசாய சட்டத்தை தெரிந்தோ தெரியாமலோ ஆதரித்து பேசுகிறேன் என்ற போர்வையில் பேசியுள்ளார். நேற்று பிப்ரவரி 14ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் கோரக்பூரில் நடந்த தேர்தல் பேரணியில் பேசும்பொழுது "பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக தங்கள் பண்ணைகளில் இருந்து உணவு பதப்படுத்தும் சாலைகளுக்கு விற்க முடியும் என்றும் காங்கிரஸ் அரசு பண்ணைகளுக்கு அருகில் உணவு பூங்காக்களை அமைக்கும்" என்றும் கூறி வாக்கு சேகரித்தார்.

மேலும் அவர் பேசும் பொழுது, "விவசாயிகள் உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் தக்காளி கெட்சப் ஆகியவற்றை வளர்க்க முடியும் என கூறினார்" அவர் கூறியது தெரிந்தோ தெரியாமலோ அல்லது வேடிக்கையாகவும் இருக்கலாம் ஆனால் எந்த விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆபத்து என விவசாயிகளை தூண்டிவிட்டு காங்கிரஸ் கட்சி போராட்டம் செய்ததோ இன்று அதே சட்டங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் மாநிலத்தில் கொண்டு வருவோம் என ராகுல் காந்தி பேசியது காங்கிரஸ் அரசின் இரட்டை வேடத்தை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது.



Source - Opindia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News