Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம் - ஏ.பி.வி.பி எச்சரிக்கை

மீண்டும் முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம் - ஏ.பி.வி.பி எச்சரிக்கை

Mohan RajBy : Mohan Raj

  |  16 Feb 2022 11:28 AM GMT

மதமாற்ற கொடுமையால் இறந்த சிறுமி லாவண்யா விவகாரத்திற்காக நீதி கேட்டுப் போராடிய ஏ.பி.வி.பி அமைப்பு மாணவர்களை விடுதலை செய்யாவிட்டால் மீண்டும் முதல்வர் ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.


தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவி லாவண்யா அந்த பள்ளியில் உள்ள சகாயமேரி என்ற என்பவரால் மதமாற்ற கொடுமையில் ஈடுபடுத்தப்பட்டதாக மரண வாக்குமூலம் அளித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தை தி.மு.க அரசு மூடி மறைக்க பார்த்த வேளையில் அண்ணாமலை தலைமையிலான தமிழக பா.ஜ.க கையிலெடுத்து வீதியில் இறங்கி போராடியது, அந்தப் போராட்டத்தின் விளைவாக இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ வசம் சென்றுள்ளது.


இந்நிலையில் கடந்த பதினைந்து நாட்களாக இந்த விவகாரம் தேசிய அளவில் மீடியாக்களில் பேசப்பட்டாலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இதற்காக வாய் திறக்கவில்லை, இதனை கண்டித்து ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினர் இறந்த மாணவிக்கு நியாயம் கேட்டு, ஆனால் அவர்களை காவல்துறையை ஏவி அடித்து கைது செய்து தற்போது புழல் சிறையில் அடைத்துள்ளது தி.மு.க அரசு.


இந்நிலையில் சென்னையில் ஏ.பி.வி.பி மாநில நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது அவர்கள் கூறியதாவது, "தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஏ.பி.வி.பி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இது தொடர்பாக விரைவில் முதல்வரை சந்தித்து முறையிட உள்ளோம் இந்த விஷயத்தில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை. எனவே போராட்டம் நடத்தியவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் மறுக்கும் பட்சத்தில் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடுவோம்" என தெரிவித்தனர்.



Source - One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News