தி.மு.க கொடுக்கும் கொலுசு, ஹாட் பாக்ஸிற்கு மக்கள் தன்மானத்தை அடகு வைக்க மாட்டார்கள் - அண்ணாமலை

By : Mohan Raj
தி.மு.க கொடுக்கும் கொலுசு, ஹாட் பாக்ஸ் போன்ற பொருள்களுக்காக மக்கள் தங்கள் தன்மானத்தை அடகு வைக்க மாட்டார்கள் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை மாநகராட்சியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை காளப்பட்டி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, "தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் எதுவும் செய்யாததால் எதுவும் மாறவில்லை எட்டு மாதத்துக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க முழுமையாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை" என்றார்.
ஆட்சிக்கு வந்தபின் கோவைக்கு கொரோனா தடுப்பூசியூ குறைத்தனர், பாரதிய ஜனதா சண்டையிட்ட பின்பு ஊசி வழங்கப்பட்டது. கோவை தானாகவே வளர்ந்து வரும் நகரம் மக்கள் தன்மானத்துடன் இருப்பவர்கள் தி.மு.க கொடுத்து வரும் கொலுசு, ஹாட் பாக்ஸ், ஆயிரம் பணத்திற்கு மக்கள் தங்களது தன்மானத்தை அடகு வைக்க மாட்டார்கள்" எனக் கூறினார்.
மேலும், "மைதானத்தில் இறங்காமல் கிரிக்கெட் விளையாடுவதை போல் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கின்றார். 2.64 கோடி பேர் ஓட்டு போட்டும் தேர்தலில் மக்களை நேரடியாக சந்திக்க அவர் வரவில்லை. மாற்றத்தை உருவாக்க பா.ஜ.க முன்வந்துள்ளது 20 ஆண்டுகளுக்கு முன்பு கோவை எப்படி இருந்ததோ போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அதேபோன்ற உருவாக்க பா.ஜ.க தயார், எனவே பா.ஜ.க'வை ஆதரியுங்கள் என வாக்கு சேகரித்தார்.
