Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக அரசியலில் அண்ணாமலை தலைமையில் காவிகள் ஏற்படுத்திய மாற்றம் - மலர துவங்கும் தாமரை

தமிழக அரசியலில் அண்ணாமலை தலைமையில் காவிகள் ஏற்படுத்திய மாற்றம் - மலர துவங்கும் தாமரை
X

Mohan RajBy : Mohan Raj

  |  18 Feb 2022 7:00 PM IST

இதுவரை இல்லாத அளவிற்கு தமிழக பா.ஜ.க'வினர் தேர்தலில் சுழன்று சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள், குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் பா.ஜ.க'வின் காவி கொடி பறப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.


தமிழகத்தில் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது பொதுவாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது சப்தமில்லாமல் நடக்கும், அரசியலமைப்பின் 74 ஆவது திருத்தம் இந்தியாவின் உள்ளூர் அரசாங்கத்தின் முக்கியமான வளர்ச்சியை ஏற்படுத்த காரணமாக அமைந்தாலும் உள்ளாட்சித் தேர்தல் முக்கியத்துவம் அந்த அளவுக்கு கவனம் இருக்காது.


பொதுவாக உள்ளாட்சியில் தேர்தலின் முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருக்கும். வரலாறுகளும் அதைத்தான் சொல்கிறது எனவே இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை, ஆனால் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த ஊர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடத்தக்க வகையில் மாநிலம் முழுவதும் கலகலப்பை ஏற்படுத்தி வளர்ந்து கொண்டிருப்பது பா.ஜ.க'தான்.


தமிழகத்தில் பிராமணர்கள் கட்சி, இரண்டு சதவீத வாக்கு வங்கி உள்ள கட்சி என தொடர்ந்து கேலி செய்யப்பட்டாலும் அண்ணாமலை தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு பா.ஜ.க'வின் ஏறுமுகமே கண்கூடாகத் தெரிகிறது. கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டதிலிருந்து பா.ஜ.க'வால் எந்த தேர்தலிலும் வெற்றியை பிடிக்க முடியாமல் போனது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆறுதலாக நான்கு இடங்களில் அதன் உறுப்பினர்கள் எம்.எல்.ஏ'வாக வெற்றி பெற்றனர்.


தற்பொழுது நீங்கள் தமிழகத்தில் பல இடங்களில் பயணம் செய்தால் ஒரு விஷயத்தை கண்கூடாகப் பார்க்க இயலும் முன்பை விட அதிகமாக பா.ஜ.க'வின் காவி கொடியை பார்க்க இயலும், பிரச்சாரங்களின் போது நான்கைந்து பேர் பா.ஜ.க காவி துண்டு போட்டு செல்லும் நிலை மாறிவிட்டது பெருமளவில் தெருமுனை கூட்டங்கள் நடைபெறுகின்றன. கூட்டம் கூட்டமாக வந்து வாக்கு சேகரிக்கிறார்கள் இளைஞர்கள், பெரிய அளவில் பா.ஜ.க'வின் சின்னம் மற்றும் கொடியினை பயன்படுத்தி வருகின்றனர். வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வது பா.ஜ.க'வின் கொடி கட்டி ஆட்டோக்கள் அங்குமிங்கும் அலைவது போன்றவைகளின் மூலம் பா.ஜ.க'வின் வளர்ச்சியை கண்கூடாக நீங்கள் பார்க்க முடியும்.


இதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் செயல்படும் பா.ஜ.க அரசு சமையல் எரிவாயு இணைப்பு, குடிநீர் இணைப்பு, மருத்துவ காப்பீடு, வங்கி கணக்குகள் கழிப்பறைகள், வீடு கட்டுதல் போன்ற நல்ல நோக்கத்துடன் கூடிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி உள்ளது கடந்த எட்டு ஆண்டுகளில். இந்த வாய்ப்பை பா.ஜ.க'வினர் பயன்படுத்தி மக்களிடம் எடுத்துச் செல்வதே இந்த ஏறுமுகத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மக்களும் எது மத்திய அரசு திட்டம் எது மாநில அரசின் செயல் என்பதை பிரித்துப் பார்க்கத் துவங்கிவிட்டனர்.


மூன்றாவதாக அண்ணாமலை தலைமை பொறுப்புக்கு வந்ததன் பின்னர் பிராமணர்களின் ஆதிக்க கட்சி என்ற பா.ஜ.க'வின் மீதுள்ள மக்களின் பார்வையை முதன்முதலாக மாற்றியுள்ளது, படித்தவர், பண்பானவர் என்று மக்களின் பார்வை அண்ணாமலை மேல் வெகுவாக பதிந்துள்ளது. அவரின் கருத்துக்களாகட்டும், பேட்டிகளாகட்டும், அவர் கூறும் விஷயங்களாகட்டும் இவை அனைத்தும் சரியே என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.


நான்காவதாக தி.மு.க'வின் வாரிசு அரசியல், குடும்ப அரசியல், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க'வில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் போன்றவைகளால் இருபெரும் திராவிட கட்சிகள் ஏற்கனவே தங்கள் வைத்துள்ள செல்வாக்கின் சதவீதத்திலிருந்து சரியத் துவங்கியுள்ளன.


இப்படியாக தமிழகத்தில் பா.ஜ.க கொடி உயரவும் திராவிடக் கட்சிகளின் கொடி இறங்கவும் சரியான தருணமாகிவிட்டது. பா.ஜ.க'வின் வெற்றியை தமிழகம் பார்க்கும் நேரம் நெருங்கி வருகிறது.


Source - Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News