Kathir News
Begin typing your search above and press return to search.

'அமைச்சர் பதவி கிடைச்சா பேசிக்கலாம்' - ஜகா வாங்கிய உதயநிதி

அமைச்சர் பதவி கிடைச்சா பேசிக்கலாம் - ஜகா வாங்கிய உதயநிதி
X

Mohan RajBy : Mohan Raj

  |  19 Feb 2022 7:45 PM IST

'அமைச்சர் பதவியை எண்ணி எல்லாம் நான் எந்த பணியை செய்யவில்லை' என உதயநிதி அமைச்சர் பதவியையே விரும்பாதது போல் போலியாக கூறியுள்ளார்.

தி.மு.க'வின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் சமீபகாலமாக கூறும் வார்த்தை 'உதயநிதி அமைச்சரானால் நன்றாக இருக்கும்', 'உதயநிதி அமைச்சரானால் சிறப்பாக செயல்படுவார்' என விளம்பரப்படுத்தும் விதமாக கூறிவருகின்றனர். உதயநிதியின் எண்ணத்தில் அப்படி ஒரு ஆசை இருந்தாலும் இல்லாதது போலவே வெளி காட்டி வருகிறார்.


அந்தவகையில் இன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது அப்பொழுது காலை ஏழு மணிக்கு சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.டி மகளிர் கல்லூரி வாக்குச்சாவடியில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி தன் மனைவியுடன் வாக்கு செலுத்த வந்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணியை என்னால் முடிந்த வரை நான் செய்து வருகிறேன் அமைச்சர் பதவியை எண்ணி நான் எந்த பணியையும் செய்யவில்லை அப்படி அந்த பதவி கிடைக்கும் பட்சத்தில் அது பற்றி பேசலாம்" என கூறினார்.

மாவட்ட அளவிலான தி.மு.க நிர்வாகிகள் முதல் மந்திரிகள் வரை உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் அமைச்சராக வேண்டும் என கூறி வரும் நிலையில் உதயநிதி இவ்வாறு கூறியிருப்பதை வைத்து பார்க்கும் போது இன்னும் இரண்டு மாதங்களில் கண்டிப்பாக உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News