Kathir News
Begin typing your search above and press return to search.

காவல் நிலையத்திலேயே புகுந்து அ.தி.மு..க பெண் வேட்பாளரை தாக்கிய தி.மு.க'வினர் - திண்டிவனம் தி.மு.க அட்ராசிட்டி

காவல் நிலையத்திலேயே புகுந்து அ.தி.மு..க பெண் வேட்பாளரை தாக்கிய தி.மு.கவினர் - திண்டிவனம் தி.மு.க அட்ராசிட்டி
X

Mohan RajBy : Mohan Raj

  |  21 Feb 2022 6:46 AM IST

பெண் என்றும் பாராமல் அ.தி.மு.க வேட்பாளரை தோல்வி பயத்தால் தி.மு.க'வினர் காவல்நிலையத்தில் புகுந்து அடித்து, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் திண்டிவனம் நகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு நேற்றைய தினம் தேர்தல் நடந்தது. இதில் 13'வது வார்டு காண வாக்குப்பதிவு திண்டிவனத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் நடைபெற்றது இந்த வார்டில் அ.தி.மு.க சார்பில் சுதா சரவணன் என்பவரும் தி.மு.க சார்பில் பாபு என்பவரும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.


இந்நிலையில் நேற்று வாக்குப்பதிவின் போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது, அதனையடுத்து அ.தி.மு.க வேட்பாளர் சுதா திண்டிவனம் அடுத்த ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்று தஞ்சம் அடைந்துள்ளார். இந்த தகவலை அறிந்து அங்கு சென்ற தி.மு.க'வினர் சுதா மற்றும் அவர் குடும்பத்தாரை காவல் நிலையத்திலேயே வைத்து தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதனையடுத்து தகவல் அறிந்த டி.ஐ.ஜி பாண்டியன் மற்றும் எஸ்.பி ஸ்ரீதா ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர், இந்த தகவலை கேள்விப்பட்ட அ.தி.மு.க'வினர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த அ.தி.மு.க பெண் வேட்பாளரை தி.மு.க'வினர் காவல் நிலையத்திலேயே சென்று தாக்கி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News