Kathir News
Begin typing your search above and press return to search.

மம்தா பானர்ஜி அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய இஸ்லாமிய மாணவர் படுகொலை

மம்தா பானர்ஜி அரசை எதிர்த்து  போராட்டம் நடத்திய இஸ்லாமிய மாணவர் படுகொலை
X

Mohan RajBy : Mohan Raj

  |  21 Feb 2022 6:30 AM IST

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக 130 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த மாணவர் அனீஷ் கான் அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார், அனீஷ் கான் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து மேற்கு வங்க அரசுக்கு எதிராக மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்திய மதச்சார்பற்ற முன்னணியின் தீவிர இஸ்லாமிய அமைப்பின் மாணவர் தலைவர் அனீஷ் கான் ஹவுரா மாவட்டத்திலுள்ள அம்தா'வில் சனிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் போலீஸ் சீருடை அணிந்து துப்பாக்கி ஏந்தி இருந்ததாகவும் மற்றவர்கள் தன்னார்வத் தொண்டர்களின் சீருடைகளை அணிந்து இருந்ததாகவும் உயிரிழந்த மாணவரின் குடும்பம் தகவல் தெரிவித்துள்ளது. 28 வயதான அனீஷ் கான் இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்யப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுகுறித்து அனீஷ் கானின் குடும்பத்தினர் கூறும்பொழுது, "நள்ளிரவு 12:30 அளவில் 4 பேர் எங்கள் வீட்டுக்கு வந்து தங்களை ஆம்டா காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் என அடையாளம் காட்டிக் கொண்டு அறிமுகப்படுத்தினர் , பின்னர் அவர்களில் ஒருவன் துப்பாக்கி ஏந்தி இருந்தால் அவர்கள் மூவரும் என் மகனை மாடிக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரம் கழித்து ஒரு பெரிய இரைச்சல் சத்தம் கேட்டது என் மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்தேன், நான் சத்தமிட்டால் 4 பேரும் தப்பி ஓடி விட்டனர் என அனீஷ் கானின் தந்தை சலீம் கான் கூறியுள்ளார்.


இந்தப் புகார் தொடர்பாக உள்ளூர் போலீசார் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர், நாங்க எந்தவித ஒரு காவல்துறை அதிகாரிகளையும் அனீஷ் கானின் வீட்டிற்கு அனுப்பவில்லை எனவும் கூறியுள்ளனர்.


மம்தா பேனர்ஜி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய மாணவர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் சனிக்கிழமையன்று கொல்கத்தாவில் உள்ள வீதிகளில் மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர்.


மம்தா பானர்ஜி அரசை கண்டித்து 130 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த மாணவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மேற்குவங்கத்தில் பல இடங்களில் பதட்டம் நிலவி வருகிறது.


Source - OpIndia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News