Kathir News
Begin typing your search above and press return to search.

ஈ.வே.ராமசாமி 'போராளி' அல்ல அவர் ஒரு 'புரளி' - ஆர்.டி.ஐயில் அம்பலமான ராமசாமியின் சுதந்திர போராட்ட நாடகம்!

ஈ.வே.ராமசாமி போராளி அல்ல அவர் ஒரு புரளி - ஆர்.டி.ஐயில் அம்பலமான ராமசாமியின் சுதந்திர போராட்ட நாடகம்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  21 Feb 2022 6:45 PM IST

'பெரியார்' என திராவிட கட்சிகளால் அழைக்கப்படுகின்ற ஈ.வே.ராமசாமி விடுதலைப் போராட்டத்தில் செப்புப் பட்டயம் வாங்கினார் என திராவிடர் கும்பலால் பரப்பப்பட்ட பொய் உண்மை இல்லை என்ற தகவல் அம்பலமாகி உள்ளது.


தமிழ்நாட்டில் 'பெரியார்' என திராவிட கும்பல் அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமி "விடுதலைப் போராளி" என்றும், அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டார் என்றும் சாதியை ஒழித்தார் என்றும் காலம் காலமாக கதைகளை கட்டி மக்களை நம்பவைத்து வந்தது திராவிட கட்சிகள். ஆனால் அவர் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பம் தற்பொழுது ஒவ்வொன்றாக உடைந்து வருகின்றது, சில மாதங்களுக்கு முன்பு பெரியாரை பாராட்டி யுனெஸ்கோ விருது கொடுத்தது என்ற பிம்பம் உடைந்தது. அந்த வகையில் தற்பொழுது விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டார் ஈ.வே.ராமசாமி என்ற பொய்யின் பின்னால் உள்ள சதியும் வெளிவந்துள்ளது.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை அரசு கௌரவிக்கும் வகையிலும், அவர்களை போற்றும் வகையிலும் தாமிர பட்டயத்தை வழங்குவது மரபு. அப்படி ஒரு செப்புப்பட்டயம் 'தந்தை பெரியார்' என்கின்ற ஈ.வே.ராமசாமி பெயரில் உள்ளதாக திராவிடக் கட்சிகள் கட்டுக்கதை கூறிவந்தனர் அந்த பட்டத்தையும் காட்சிக்கு வைத்தனர்.

ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பொது நபர் ஒருவர் பெரியார் 1972 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தாமிர பட்டயம் வாங்கினாரா என்ற உண்மையை அறிய முற்பட்டார், அதற்கு பதிலாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த பதிலாவது 'இதுவரை ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ற பெயரில் எந்த ஒரு பட்டயமும் வழங்கப்படவில்லை தமிழகத்தில்' என்ற உண்மை பதிலாக கிடைத்துள்ளது.


இதனால் 'பெரியார்' என அழைக்கப்படுகின்ற ஈ.வே.ராமசாமி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார் என்ற இதுவரை கட்டியமைக்கப்பட்ட பிம்பம் சுக்குநூறாக உடைந்து உள்ளது. இவ்வளவிற்கும் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட குடியரசு தின ஊர்தியில் பெரியார் என பெயர் வைத்து திராவிட கட்சிகளால் அழைக்கப்பட்ட ஈ.வே.ராமசாமி உருவத்தை முன்னால் வைத்து ஊர்தி ஏற்பாடு செய்திருந்தது தி.மு.க அரசு என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி எதுவுமே செய்யாத ஒருவரை தான் இத்தனை நாட்களாக திராவிட கட்சிகள் போராளியாக காண்பித்து பொய்பரப்பிக் கொண்டிருந்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News