தி.மு.க.வுக்கு சாதகமாக தேர்தல் முடிவு: பறந்த வாய்மொழி உத்தரவு!
வாக்கு எண்ணும் மையங்களில் அதிகமான பாதுகாப்பு வழங்க வேண்டும், வெற்றி பெற்றவர்களின் விவரங்களை உடனடியாக அறிவிக்கக்கோரி மாவட்ட சிறப்பு அதிகாரிகளிடம் அதிமுக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

By : Thangavelu
வாக்கு எண்ணும் மையங்களில் அதிகமான பாதுகாப்பு வழங்க வேண்டும், வெற்றி பெற்றவர்களின் விவரங்களை உடனடியாக அறிவிக்கக்கோரி மாவட்ட சிறப்பு அதிகாரிகளிடம் அதிமுக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக சேர்ந்து சிறப்பு தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி தேர்தலில் திமுகவினர் தேர்தல் விதிகளை மீறி பணம் மற்றும் பரிசுகளை வழங்கினர். இது பற்றி பொதுமக்கள் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் திமுகவுக்கு சாதகமாக நடப்பதற்கு வாய்மொழி உத்தரவு பறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவிட்டப்படி அனைத்தையும் வீடியோவாக எடுக்க வேண்டும். முதலில் தபால் ஓட்டுகளை எண்ணப்பட வேண்டும். அதன் பின்னரே வாக்கு இயந்திரத்தில் பதிவானதை எண்ண வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar