எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத ஓசூர் மாநகராட்சி: சுயேட்சைகளின் கை ஓங்குமா?
By : Thangavelu
மொத்தம் உள்ள 45 வார்டுகளை கொண்ட ஓசூர் மாநகாட்சியில் எந்த அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இருக்கிறது. இதனால் அங்கு வெற்றி பெற்ற 5 சுயேட்சைகளுக்கு பம்பர் பரிசு கிடைத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு கடந்த பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் நேற்று (பிப்ரவரி 22) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியது. அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி, ஒரு சில பேரூராட்சிகளை தவிற மற்ற அனைத்தையும் திமுகவே பிடித்துள்ளது.
இந்நிலையில், ஓசூர் மாநகராட்சியில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் அங்கு 45 வார்டுகள் உள்ளது. அதில் அதிமுக 16, திமுக 21, பாஜக 1, காங்கிரஸ் 1, சுயேட்சைகள 5 இடங்களை பிடித்துள்ளனர். இதனால் பெரும்பான்மைக்கு தேவையான 23 இடங்களை எந்த கட்சியும் பிடிக்கவில்லை. இதனால் சுயேட்சைகளின் கைகள் ஓங்கியுள்ளது. எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று ஒரு சில நாட்களில் தெரிந்து விடும்.
Source, Image Courtesy: Dinamalar