ஒரு ஓட்டு கூட வாங்காத அ.தி.மு.க வேட்பாளர் - தி.மு.க'வுடன் ரகசிய ஒப்பந்தமா? பின்னணி என்ன

By : Mohan Raj
ஒரு ஓட்டு கூட வாங்காமல் தோல்வியை தழுவிய அ.தி.மு.க வேட்பாளர் என்ற விவகாரத்தின் பின்னணி என்ன என அலசி பார்த்தால் அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் ஏழாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் முகமது இப்ராம்ஷா ஒரு ஓட்டு கூட வாங்கவில்லை, வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே அவருக்கு பதிவான வாக்குகள் பூஜ்ஜியமாக இருந்தது இவ்வளவிற்கும் அவரது மனைவி உட்பட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் அந்த வார்டிலேயே ஓட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் வார்டில் மொத்தமாக 463 வாக்குகள் பதிவாகி இருக்கும் நிலையில் ஒரு ஓட்டு கூட அ.தி.மு.க'விற்கு கிடைக்கவில்லை, அவருக்கு ஓட்டு போடாமல் மாற்றுக் கட்சியினருக்கு ஓட்டுப்போட்டு இருக்கிறாரா பல விவாதங்கள கிளம்பிய வருகின்றது. இதே போல அதே வார்டில் மற்றொரு சுயேச்சை வேட்பாளரான தர்மராஜ் என்பவருக்கும் வாக்குகள் ஏதும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வாக்காளர்கள் சிலர் இது பற்றி கூறும் பொழுது, "7-வது வார்டு அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டார் முகமது இப்ராம்ஷா ஆனால் அவருடைய மருமகன் பாரூக் தி.மு.க சார்பில் போட்டியிட்டார், ஆரம்பத்திலிருந்தே பாரூக் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது ஆனால் கடைசி நேரத்தில் சுயேச்சை வேட்பாளர்களால் ஓட்டு பிரியும் என்கின்ற நிலை உருவாகும் பொழுது அவரது குடும்பத்தினரே மொத்தமாக பேசி பாரூக்'கிற்கு ஓட்டு போட்டிருக்கலாம்" என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மாமனார் அ.தி.மு.க'விலும் மருமகன் தி.மு.க'விலும் பேசி வைத்து போட்டியிட்டதே இதற்கு காரணமென தெரியவந்துள்ளது.
