Kathir News
Begin typing your search above and press return to search.

"பணம் கொடுத்தால்தான் அரசு வேலை என்ற நிலையை மாற்றி ஐந்து லட்சம் வேலை வழங்கியுள்ளோம்" - யோகி ஆதித்யநாத்

பணம் கொடுத்தால்தான் அரசு வேலை என்ற நிலையை மாற்றி ஐந்து லட்சம் வேலை வழங்கியுள்ளோம் - யோகி ஆதித்யநாத்
X

Mohan RajBy : Mohan Raj

  |  23 Feb 2022 7:45 PM IST

"2017'க்கு முந்தைய ஆட்சியில் மாநிலத்தில் காலிப்பணியிடங்கள் இருந்த போதெல்லாம் வேலை வழங்க பணம் வசூலிக்கப்பட்டது ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இளைஞர்களுக்கு 5 லட்சம் அரசு வேலைகளை வழங்கி உள்ளோம்" என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.


403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது இதில் முதல் மூன்று கட்ட தேர்தல்கள் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் இன்று 59 தொகுதிகளுக்கான நான்காவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐந்தாம் கட்ட தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான தீவிர பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.


அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, "உத்திரபிரதேசத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சிக்கும் இந்த தேர்தல் அவசியம் நாட்டின் மொத்த பரப்பளவில் உத்திரப்பிரதேச பரப்பளவை 7 சதவீதமாக இருக்கலாம் ஆனால் மக்கள் தொகையை பார்த்தால் அது இந்தியாவில் 16 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. இலவச தடுப்பூசிகளை பெற்ற 28 கோடி மக்கள் பா.ஜ.க'வின் வெற்றியை உறுதி செய்வார்கள்" என்றார்.


தொடர்ந்து அமைதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "2017 முந்தைய ஆட்சியில் மாநிலத்தில் காலிப்பணியிடங்கள் இருந்த பொழுதெல்லாம் வேலை வழங்க பணம் வசூலிக்கப்பட்டது ஆனால் நாங்கள் வந்த பிறகு இளைஞர்களுக்கு 5 லட்சம் அரசு வேலைகளை வழங்கி உள்ளோம்" என கூறினார்.


நாட்டில் அனைத்து தரப்பினரும் உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகளை ஆர்வமுடன் எதிர்கொள்கின்றனர்.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News