Kathir News
Begin typing your search above and press return to search.

சரிவை நோக்கிச் செல்லும் தே.மு.தி.க - யார் காரணம்?

சரிவை நோக்கிச் செல்லும் தே.மு.தி.க - யார் காரணம்?
X

Mohan RajBy : Mohan Raj

  |  23 Feb 2022 7:45 PM IST

கடந்த 8 ஆண்டுகளாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.


கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஜாம்பவான்கள் இருந்த காலத்திலேயே அரசியலில் இறங்கி எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை உயர்ந்தவர் நடிகர் விஜயகாந்த். கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே தே.மு.தி.க வேட்பாளர்களை தமிழகம் முழுவதும் விஜயகாந்த் களமிறங்கினார், அடுத்தபடியாக அ.தி.மு.க'வுடன் கைகோர்த்த தே.மு.தி.க 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை தி.மு.க இழந்தபொழுது தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக பதவியை கைப்பற்றி ஆசனத்தில் அமர்ந்தார்.


இப்படி சில காலத்திலேயே தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வளம் வந்த தே.மு.தி.க கடந்த 8 ஆண்டுகளாக இறங்கு முகத்திலேயே உள்ளது.


ஏறு முகத்திலேயே இருந்த விஜயகாந்தை எப்பொழுது வைகோ திருமாவளவன் உடன் கூட்டணி அமைத்து 'மக்கள் நல கூட்டணி' என தேர்தலை சந்தித்தாரோ அப்போதிலிருந்தே அவருக்கு இறங்கு முகம்தான். 2016'ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்த மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தால் விஜயகாந்த் அப்பொழுது பெரும் பின்னடைவை சந்தித்தார். அப்பொழுது கட்சியின் வாக்கு வங்கி 2.41 சதவீதமாக சரிந்தது பின்னர் 2019'ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பாஜக கூட்டணியிலிருந்து தேர்தலை சந்தித்தார்.


மத்தியில் தே.மு.தி.க ஆதரவளித்த பா.ஜ.க வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் தே.மு.தி.க ஜொலிக்க முடியவில்லை, அடுத்தபடியாக 2020'ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறிய தே.மு.தி.க டி.டி.வி தினகரன் கட்சியோடு இணைந்து தேர்தலை சந்தித்தார் அதுவரை காணாத படுதோல்வியை தே.மு.தி.க சந்தித்தது.


இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க தனித்துப் போட்டியிட்டது தே.மு.தி.க'வின் தொடர் தோல்விகளால் அந்த கட்சியினரும் துவண்டு போயிரந்தார்கள், இதன் காரணமாக பல முன்னணி நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி மாற்றுக் கட்சிகள் சேர்ந்தனர் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு கட்சியில் தொய்வு ஏற்பட்ட இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் கட்சியினர்.


ஒரு காலத்தில் தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு கட்சிகளுக்கு மாற்றாக பார்க்கப்பட்ட தே.மு.தி.க கட்சி இன்று விஜயகாந்தின் உடல்நிலை காரணமாக சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.



Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News