Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தின் பெருமையை உயர்த்திப் பிடித்த பெருமகளின் பிறந்தநாளில் வணங்குகிறேன்!

தமிழகத்தின் பெருமையை உயர்த்திப் பிடித்த பெருமகளின் பிறந்தநாளில் வணங்குகிறேன்!

ThangaveluBy : Thangavelu

  |  24 Feb 2022 7:46 AM GMT

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும் அவரது திட்டங்கள் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், தன் தனித்துவ ஆட்சி திறத்தால் தமிழகத்தின் தலைமை ஏற்று முத்திரை பதித்தவர் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்கள், பாரதி கண்ட பெருமைக்குரிய பெண்மணி. இந்திய தேசத்தில் தமிழகத்தின் பெருமையை உயர்த்திப் பிடித்த பெருமகளின் பிறந்தநாளில் வணங்கி மகிழ்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News