Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி-புதின் உரையாடலில் நடந்தது என்ன?

மோடி-புதின் உரையாடலில் நடந்தது என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  25 Feb 2022 1:37 PM GMT

"எத்தனை உலகத் தலைவர்கள் சொல்வதை புதின் கேட்பார் என எனக்குத் தெரியவில்லை ஆனால் மோடி மீதான மதிப்பு காரணமாக குறைந்தபட்சம் புதின் அதைப்பற்றி யோசிப்பார்" என உக்ரைன் தூதர் கூறியது பிரதமர் மோடி மீதான உலக அரங்கிலான மதிப்பை வெளிக்காட்டியுள்ளது.


உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலை தொடங்கியுள்ளது உக்ரேனின் தலைநகரை பிடிக்கும் எண்ணத்துடன் படைகள் முன்னேறி வருகின்றன, இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு கூட்டு பதிலடி கொடுக்கும் நடவடிக்கை குறித்து ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார், தொடர்ந்து உங்களுக்கு ஆதரவாக அமெரிக்க படையை அனுப்பும் திட்டம் இல்லை என தெரிவித்தார். நேட்டோ அமைப்பும் மக்களுக்கு உதவ முன்வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.


இந்நிலையில், "இந்திய பிரதமர் மோடி கூறினால் ரஷ்ய அதிபர் புதின் கேட்பார்" என உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உக்ரைன் தூதர் இகோர் பொலிகா பேசுகையில், "ரஷ்யாவுடன் இந்தியா சிறப்பான உறவை கொண்டிருக்கிறது ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோரை உடனடியாக தொடர்பு கொண்டு பேசுங்கள் என பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்கிறேன். இந்திய பிரதமர் மோடி மிகவும் சக்தி வாய்ந்த மரியாதைக்குரிய தலைவர்களுள் ஒருவர் எத்தனை உலகத் தலைவர்கள் சொல்வதைத் தான் கேட்பார் என எனக்கு தெரியவில்லை ஆனால் மோடி மீதான மதிப்பு காரணமாக குறைந்தபட்சம் அதனைப் பற்றி யோசிப்பார். இந்தியர்களிடம் இருந்து நாங்கள் மிகவும் சாதகமான அணுகுமுறையை எதிர்பார்க்கிறோம்" என்றார்.


இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதினை இந்திய பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். உக்ரைன் தொடர்பான சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கினார்.


அந்த உரையாடலின் போது 'ரஷ்யாவுக்கும், நேட்டோ அமைப்புக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளின் முரண்களை நேர்மையான உரையாடல் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என தனது நீண்டகால நம்பிக்கை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார், மேலும் போரை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். போரை நிறுத்தி பேச்சு வார்த்தைக்கு திரும்புவதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சியின் அவசியம் குறித்தும் அப்போது புதினிடன் பேசினார் என பிரதமர் அலுவலக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும், இந்தியா மாணவர்களின் கவலைகளை ரஷ்ய அதிபர் பிரதமர் மோடி தெரிவித்தார் என்றும் அவர்கள் பாதுகாப்பாக வெளியே நிற்கும் இந்தியாவிற்கு திரும்புவதற்கும், இந்திய அதிக முன்னுரிமை அளிக்கிறது எனவும் தெரிவித்தார் இதுதொடர்பாக புதின் யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News