தீர்மானத்தில் வாக்களிக்காத இந்தியா- நிரூபிக்கப்பட்டது இந்தியாவின் நடுநிலை

By : Mohan Raj
இந்தியா நடுநிலை வகிக்கும் முடிவை எடுத்ததன் காரணமாக 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக பிற நாடுகள் வாக்களித்த போதிலும் இந்தியா,சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என தெரிகிறது.
ரஷ்யா கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது, உலகின் பல நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ரஷ்யா அதனைப் பற்றி பொருட்படுத்தாமல் தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் நெருங்கி கைப்பற்றும் நோக்குடன் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ரஷ்யா உடனடியாக நிபந்தனையின்றி உக்ரைன் எல்லையில் இருந்தும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்குள் இருந்தும் அனைத்து ராணுவப் படைகளையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி பேசுகையில், "சமீபத்திய சம்பவங்களால் இந்தியா மிகவும் கவலை அடைந்துள்ளது, வன்முறை மற்றும் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம். மனித உயிர்களை வழியாக வைத்து எந்த தீர்வையும் எட்ட முடியாது உக்ரைனில் உள்ள ஏராளமான இந்திய மாணவர்களை உள்ளடக்கிய இந்திய சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்கிறோம்" என்றார்.
மேலும், "உலகளாவிய ஒழுங்கு ஐக்கிய நாடுகளின் சாசனம் சர்வதேச சட்டம் மற்றும் மாநிலங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, அனைத்து உறுப்பு நாடுகளும் ஆக்கபூர்வமான வழியில் கண்டுபிடித்து தான் இந்த கொள்கைகளை மதிக்க வேண்டும்.
கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகளை தீர்த்து வைப்பதற்கான ஒரே பதில் உரையாடல் மட்டுமே இருப்பினும் இந்த நேரத்தில் அச்சுறுத்தலாக தோன்றலாம். அரசியல் ராஜதந்திர வழிகள் கைவிடப்பட்டது வருத்தமளிக்கிறது, நாம் அதற்கு திரும்ப வேண்டும் இந்த அனைத்து காரணங்களுக்காகவும் இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்துள்ளது" என்றார்.
15 நாடுகளில் 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த ரஷ்யாவுக்கு எதிரான இந்த தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது. காரணம் ரஷ்யா தனக்கு உள்ள 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. எனினும் உலக அரங்கில் ரஷ்யா தனித்து விடப்பட்டு உள்ளது என்பதை இந்த தீர்மானமானது உணர்த்தியிருப்பதாக உலக நாடுகள் தெரிவிக்கின்றன.
