Kathir News
Begin typing your search above and press return to search.

"என் இறுதி மூச்சு உள்ளவரை காசி என்னை விட்டுப் போகாது" - வாரணாசியில் மோடி

என் இறுதி மூச்சு உள்ளவரை காசி என்னை விட்டுப் போகாது - வாரணாசியில் மோடி

Mohan RajBy : Mohan Raj

  |  28 Feb 2022 7:15 AM GMT

"என் இறுதி மூச்சு உள்ளவரை காசி என்னை விட்டுப் போகாது மஹாதேவரின் பக்தர்களுக்கு சேவை செய்யும்பொழுது இறப்பதை விட சிறந்தது எது?" என மோடி கூறியுள்ளார்.


பிரதமர் மோடி காசி விஸ்வநாத் வழித்தடத்தை திறந்து வைப்பதற்கு முன்பு சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது. அகிலேஷ் யாதவ் கூறியதாவது, "ஒருவர் தனது கடைசி நாட்களை காசியில் கழிப்பது நல்லது" என கிண்டலான முறையில் கூறினர். அகிலேஷ் யாதவின் இந்த கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.


வாரணாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது, "காசி விஸ்வநாத் வழித்தடத்தை திறந்து வைக்க நான் இங்கு வந்திருந்த பொழுது எனது மரணத்திற்கு ஆசைப்படும் சிலர் தங்கள் தரத்தை தாழ்த்திக் கொண்டனர், ஆனாலும் அதை நான் ரசித்தேன் ஏனென்றால் நான் இறுதி மூச்சு உள்ளவரை காசி என்னை விட்டுப் போகாது, காசி மக்களும் என்னை விட்டு பிரிய மாட்டார்கள் மஹாதேவரின் பக்தர்களுக்கு சேவை செய்யும் பொழுது இறப்பதை விட சிறந்தது எது?" என கேட்டார்.


மேலும் அவர் கூறியதாவது, "நாங்கள் தேர்தலில் கூட வெற்றி பெறுவதை நினைக்கவில்லை, ஆனால் எங்களின் முழுக்கவனமும் மக்களின் இதயங்களை வெல்வதில்தான் மையமாக உள்ளது. ஒரு பா.ஜ.க ஊழியருக்கு சேவை என்பது இறுதி மதிப்பு எனவே பா.ஜ.க ஊழியருக்கு தனி நபரை விட கட்சி பெரிது, கட்சியை விட தேசம் பெரிது என்பது எப்பொழுது எங்களின் குறிக்கோளாக இருந்து வருகிறத" எனக் கூறினார்.



Source - Opindia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News