Kathir News
Begin typing your search above and press return to search.

உக்ரேனில் சிக்கித்தவிக்கும் சி.ஏ.ஏ போராளி ரஷீத் ரிஸ்வான்

உக்ரேனில் சிக்கித்தவிக்கும் சி.ஏ.ஏ போராளி ரஷீத் ரிஸ்வான்

Mohan RajBy : Mohan Raj

  |  28 Feb 2022 8:30 AM GMT

இந்தியாவில் CAA போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வந்த மாணவர் ரஷீத் ரிஸ்வான் தற்பொழுது உக்ரைனில் நடக்கும் போருக்கு மத்தியில் சிக்கி தவிக்கிறார்.


தற்பொழுது ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடந்து வரும் வேளையில போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து தன்னை வெளியேற்றாத இந்திய அரசுக்கு எதிராக தனது கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு மாணவரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.

ரஷீத் ரிஸ்வான் என அடையாளம் காணப்பட்ட மாணவர் அவர், மேலும் அவர் உக்ரைனில் 10 மணி நேரத்திற்கும் மேலாக எல்லைக்கு அருகே சிக்கிக் கொண்டதாகவும் எந்த அதிகாரியும் தொடர்பு கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் மோடி அரசாங்கத்தை தாக்கியும் இந்திய அரசு மற்றும் அதிகாரிகளின் நம்பகத்தன்மையும் குறித்து கேள்வி எழுப்பி இந்திய அரசாங்க கணக்குகளையும் குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டிருந்தார்.


உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மக்களை மீட்க இந்திய அரசாங்கம் "ஆபரேஷன் கங்காவை" தொடங்கியபோது தவறான கருத்துக்கள் இடதுசாரிகளால் மக்களிடையே பரப்பப்பட்டு வந்தன, ஆனால் இந்தியா தற்பொழுது உக்ரைனின் அண்டை நாடுகளான ரொமேனியா மற்றும் ஹங்கேரியில் இருந்து 710 இந்தியர்களை ஏற்றி மூன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளது. இருப்பினும் இந்தியாவின் நடவடிக்கையை குறை கூறுவதையே அந்த மாணவர் பிரதானமாக செய்து வருகிறார்.


ரஷித் ரிஸ்வான் என்ற அந்த மாணவரின் பழைய சமூக வலைத்தளப் பதிவுகளை எடுத்து பார்த்து அவரது விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் சமூக வலைதள அரசியல் ஆர்வலர்கள், அதன்படி பீகாரின் போபால் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஷீத் ரிஸ்வான். சமூக வலைதளங்களில் பல இந்திய எதிர்ப்பு பிரச்சாரங்களின் ஒருபகுதியாக இருந்தவர் எனவும் அம்பலமாகியுள்ளது. உக்ரைனில் இருந்து '@rshdrizwan' என்ற டுவிட்டரில் இருந்து வீடியோ வெளியிட்ட அவர் இந்திய அரசுக்கு எதிராக போலிப் பிரச்சாரம் செய்துள்ளார். மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டில் தனது தாத்தாவின் இறந்த உடலில் அமைந்திருக்கும் மூன்று வயது குழந்தையின் படத்தை வெளியிட்டு 'காஷ்மீர் சிரியா'வாக மாறிவிட்டது' எனவும் கூறியவர் இவர்தான்.


மேலும் உக்ரைனில் உள்ள தனது கல்லூரிக்கு வெளியே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ரிஸ்வான் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது, அதுமட்டுமில்லாமல் ரிஸ்வான் தீவிர இஸ்லாமியவாதிகளை ஆதரிப்பதாகவும் அவரது பதிவுகள் தெரிவிக்கின்றன.


மேலும் டெல்லியில் நடைபெற்ற ஒரு கலவரத்தை குறிப்பிட்டு "டெல்லி போலீசார் முஸ்லிம்களை மட்டும் கைது செய்கின்றனர், அவர்கள் கொலைகாரர்களாக இருந்தாலும் இந்துக்களுக்கு எதிராக செயல்பட வில்லை" எனவும் ஒரு காலத்தில் அவர் பதிவிட்டது இங்கே குறிப்பிடதக்கது.


நடந்து வரும் இந்த மோதல்களுக்கு மத்திய லண்டனில் வசிக்கும் இந்திய குடிமக்களை திரும்ப அழைத்து வர இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்திய அரசாங்கத்தின் விரைவான தலையீட்டிற்கு நன்றி என அங்கிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர், "ஆப்ரேஷன் கங்கா" தொடங்கியதில் இருந்து இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் இந்தியாவிற்கு பாதுகாப்பு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியாவுக்கு திரும்ப காத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அதன் அண்டை நாடான ரஷ்யா, பல்கேரியா, ருமேனியா, ஹங்கேரி, போலந்து போன்ற நாடுகளுடன் மோடி அரசாங்கம் இந்தியர்களை விரைவாக வெளியேற்றி வருகிறது. ரிஸ்வான் போன்றவர்கள் சி.ஏ.ஏ போராட்டத்தில் இருந்து இந்தியாவையும், மோடி அரசையும் குறை கூறுவதையே தொழிலாக வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Source - OpIndia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News