"நான் படித்த காலத்தில் பள்ளி வாசலில் ஹிஜாப்பை கழற்றிவிட்டுதான் செல்வார்கள்" - குஷ்பூ

By : Mohan Raj
"நான் படித்த காலத்தில் ஹிஜாபை பள்ளி வளாக வாசலிலேயே கழற்றி விட்டுத்தான் பள்ளிக்குச் செல்வார்கள்" என பா.ஜ.க'வின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கூறியுள்ளார்.
சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குஷ்பு ஹிஜாப் விவகாரம் குறித்து கூறியதாவது, "நான் படித்த காலத்தில் பள்ளி வளாக வாசலிலேயே ஹிஜாபை கழற்றிவிட்ட தான் பள்ளிக்கு நுழைவார்கள், கல்வி கற்கக்கூடிய பள்ளியின் அனைத்து மாணவர்களும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் சீருடைக் கட்டுப்பாடு ஆனால் கர்நாடக விவகாரத்தில் பள்ளியினுள் ஹிஜாப் அணிந்து தான் செல்வேன் என பிரச்சினை எழுப்புபவர்கள் யார்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், "என்னை பொறுத்தவரை ஹிஜாப் அணிந்து செல்வதும் தவறு, காவி துண்டு அணிந்து செல்வதும் தவறு மற்றபடி கைகளில் கயிறு கட்டி கொள்வதையோ பிராமிண்ஸ் பூணூல் அணிவதையோ, முஸ்லிம்கள் தாவிச் அணிவதையோ கழட்டச் சொல்லி யாருமே சொல்லவில்லை. சீருடை கட்டுப்பாடு என்ற ஒன்று இருக்கும் பொழுது அதை யாரும் மீறாதீர்கள் என்றுதான் சொல்கிறோம்" என்றார்.
