தோழமை சுடுதல்: வி.சி.க'வுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது! கடும் கோபத்தில் வி.சி.க'வினர் !
By : Dhivakar
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி மன்ற தலைவருக்கான மறைமுகத் தேர்தல் வாக்குப் பதிவில் தி.மு.க'வினருக்கும் வி.சி.க'வினருக்கும் மிகவும் கடுமையாக மோதல் நிலவிய நிலையில், தேர்தல் முடிவுகள் வெளி வந்தன.
தமிழகமெங்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று நகர்மன்ற மற்றும் மாநகர மன்ற தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் சலசலப்பு நிலவி வருகிறது.
தி.மு.க'வின் கூட்டணி உடன்பாட்டின்படி, கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை வி.சி.க கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
ஆனால் தற்போது நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள, 30 கவுன்சிலர்களில் 18 கவுன்சிலர்கள் தி.மு.க'வினர். இதையடுத்து தி.மு.க கவுன்சிலர் ஜெயந்தி ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்து, திமுக கவுன்சிலர்களை சேர்த்து 24 கவுன்சிலர்களை தி.மு.க'வினர் விலைக்கு வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. வி.சி.க கட்சியின் வேட்பாளர் கிரிஜா கிருபாகரன் போதிய கவுன்சிலர்களின் ஆதரவு இல்லாததால் தேர்தலில் தோல்வியுற்றார்.
இந்த நிகழ்வுகளின் போது வாக்குப்பதிவு நடைபெறும் மையத்திற்கு வெளியே வி.சி.க'வினர் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளை மறித்து கோஷங்களை எழுப்பினர்.
கூட்டணி உடன்பாட்டை மீறி செயல்பட்ட தி.மு.க'வினர் மீது கடும் கோபத்தில் வி.சி.க'வினர் இருந்து வருகின்றனர்.