Kathir News
Begin typing your search above and press return to search.

மாணவர்களை வைத்து பிரிவினை அரசியலில் ஈடுபடாதீர்கள்!- முதல்வர் ஸ்டாலினுக்கு சி.டி.ரவி அறிவுரை!

மாணவர்களை வைத்து பிரிவினை அரசியலில் ஈடுபடாதீர்கள்!- முதல்வர் ஸ்டாலினுக்கு சி.டி.ரவி அறிவுரை!
X

ThangaveluBy : Thangavelu

  |  5 March 2022 6:43 AM GMT

முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்கள் மீது போலி அக்கறையை நிரூபிப்பதற்காக பிரிவினை அரசியல் செய்யாதீர்கள் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி அறிவுரை வழங்கியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் அங்குள்ள வெளிநாட்டினர் பலர் சிக்கியுள்ளனர். அதே போன்று இந்திய மாணவர்களும் சிக்கியுள்ளனர். அதில் பலரையும் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி மீட்டு விட்டது. இன்னும் குறைந்த அளவிலான இந்தியர்கள் மட்டுமே இருப்பதாக வெளியுறவுத்துறை கூறியது.

இதற்கிடையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது அரசியல் லாபத்திற்காக உடனடியாக தமிழர்களை மீட்பதற்காக குழு ஒன்றை நியமித்துள்ளார். அந்த குழுவில் மூன்று எம்.பி.,க்கள், ஒரு எம்.எல்.ஏ., மற்றும் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்குவர். அவர்கள் உடனடியாக உக்ரைன் செல்வதற்கு வெளியுறவுத்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அது மட்டுமின்றி தமிழக மாணவர்கள் பலர் மீட்கப்படவில்லை என்று பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக தமிழக பாஜக குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அசோக முத்திரை பதித்த இந்திய பாஸ்போர்ட் ஒன்று மட்டுமே வெளிநாடு செல்லும் இந்தியர்களின் ஒரே அடையாளம் எனவும், தமிழக மக்கள் மீதான உங்கள் போலி அக்கறையை நிரூபிப்பதற்காக தயவு செய்து பிரிவினைவாத அரசியலில் ஈடுபடாதீர்கள் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி அறிவுரை வழங்கியுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: Sunday Guardian

Next Story
கதிர் தொகுப்பு
Trending News