உக்ரைனில் உள்ள மாணவியின் பெற்றோருக்கு நம்பிக்கை அளித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ., சரஸ்வதி!
By : Thangavelu
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் அங்குள்ள இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இன்னும் சில இடங்களில் போக்குவரத்து தடையின் காரணமாக ஒரு சில மாணவர்களை மீட்பதில் மத்திய அரசுக்கு சிறு பின்னடைவு இருந்து வருகிறது.
அதனையும் சரி செய்து அனைத்து மாணவர்களையும் பத்திரமாக மீட்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியுடன் உள்ளார். அதே போன்று தமிழக உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து உக்ரைனுக்கு படிக்க சென்ற மாணவர்களின் பெற்றோர்களை பாஜக தலைவர்கள் சந்தித்து நம்பிக்கை அளித்து வருகின்றனர். அதே போன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவால் பல நிர்வாகிகள் மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து நம்பிக்கை அளித்து வருகின்றனர்.
கொல்லம்பாளையம், பகுதியை சேர்ந்த மருத்துவ மாணவி வந்தனா, உக்ரைனில் தவித்து வரும் நிலையில், அவரின் பெற்றோரை சந்தித்த நமது சட்டமன்ற உறுப்பினர் @drcksaraswathi அவர்கள், அவரை மீட்க மத்திய அரசு மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை அளித்தார்.@annamalai_k @KesavaVinayakan pic.twitter.com/OlF4avodcT
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 6, 2022
அதே போன்று ஈரோடு மாவட்டத்தில் பல மாணவர்கள் உக்ரைனில் படிக்க சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த மருத்துவ மாணவி வந்தனா பெற்றோர்களை மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ., சி.கே.சரஸ்வதி சந்தித்து நம்பிக்கை அளித்தார். மாணவியை மத்திய அரசு மீட்டு தாயகம் கொண்டு வரும் என்ற உறுதிமொழியையும் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Twiter